நாளை ரிலீசாகும் அஜித்தின் 'விவேகம்' படத்தை ஏன் பார்க்கணும்? ஐந்து முக்கிய காரணங்கள்!

ஒருவழியாக ‘தல’ அஜித்தின் விவேகம் படம் நாளை (ஆகஸ்ட் 24) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இப்படம் உள்ளது. ரசிகர்கள் மட்டுமல்ல, அஜித் என்பதைத் தாண்டி மற்றவர்களும் இப்படத்தை ஏன் பார்க்கலாம் என்பது குறித்த ஐந்து காரணங்களை இங்கே பார்க்கலாம்.

*ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம். இயக்குனர் சிவா இதற்காக பிரத்யேகமாக பல முயற்சிகளை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துள்ளாராம். வெளியாகியுள்ள டீசர், டிரைலர்களிலேயே நாம் அதனை காண முடியும்.

*தனது சினிமா கேரியரிலேயே சிக்ஸ்பேக் வைத்து அஜித் நடித்திருக்கும் முதல் படம் இதுதான். அந்தளவிற்கு கதை அவரை மிகவும் ஈர்த்துவிட்டதாம். இந்தக் கதையில் சாதாரண உடலமைப்புடன் நடித்தால் நிச்சயம் நன்றாக இருக்காது என்பதாலேயே, முதுகு வலிக்காக அவர் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையையும் மீறி, அளவுக்கு அதிகமாக உழைத்து, சிக்ஸ் பேக் வைத்தாராம் அஜித். முதல் நாள் ஷூட்டிங்கில் அஜித்தை பார்த்த இயக்குனர் சிவா கண் கலங்கிவிட்டாராம்.

*தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் இப்படத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக படக்குழு நிறைய ரிஸ்க் எடுத்துள்ளதாம். நிச்சயம் இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும் என படக்குழு நம்புகிறது.

*நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

* இப்படத்தில் சர்வதேச உளவாளியாக நடித்திருக்கும் அஜித்தின் ரேஞ், இப்படத்திற்கு பிறகு அடுத்த லெவலுக்கு நிச்சயம் சென்றுவிடும் என தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளாராம் இயக்குனர் சிவா.

×Close
×Close