/indian-express-tamil/media/media_files/2025/11/03/hero-2025-11-03-10-14-33.jpg)
திரைத்துறையில் தமிழ், இந்தி, தெலுங்கு என எதை எடுத்துக் கொண்டாலும் 50, 60 வயதுடைய நடிகர்கள் இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடிப்பது வழக்கமான ஒன்றாகும். தமிழில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்துள்ளனர். நடிகை மீனா ரஜினியுடன் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இதே ‘முத்து’, ‘எஜமான்’ போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
இதேபோன்று ஐஸ்வர்யா ராய், ரஜினியின் ‘எந்திரன்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், கமல்ஹாசனும் பல இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதேபோன்று, தெலுங்கில் பாலையா தற்போது வரையிலும் பல இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்த்து நடித்து வருகிறார். இப்படி 50,60 வயதுடைய நடிகர்கள் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் நிலையில் 48 வயதுடைய பிரபல நடிகை 24 வயது இளம் நடிகருடன் நடித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
அதாவது, ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிதாக இருந்தபோதிலும் இரண்டு நட்சத்திரங்களுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி பார்வையாளர்களை கவர்ந்தது. அந்த நடிகர் வேறு யாருமில்லை இஷான் கட்டர்தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் நடிகை தபுவுக்கு ஜோடியாக "எ சூட்டபிள் பாய்" தொடரில் இவர் நடித்திருந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இந்தத் வெப் தொடர் கலவையான விமர்சனங்களை பெற்றது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/11/03/a-suitable-2025-11-03-10-15-01.jpg)
அப்போது, இஷானுக்கு 24 வயது. தபுவுக்கு 48 வயது. விக்ரம் சேத் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தொடர், 1950-களின் இந்தியாவில் நடக்கும் காதல், அரசியல் மற்றும் குடும்ப நாடகங்களைச் சுற்றி வருவதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாகும். இந்த வெப் தொடரை மீரா நாயர் இயக்கியுள்ளார். "எ சூட்டபிள் பாய்" வெப் தொடரை நெட்பிளிக் ஓ.டி.டி தளத்தில் ரசிகர்கள் பார்த்து மகிழலாம்.
இஷான் கட்டர் நட்சத்திர தம்பதிகளான  ராஜேஷ் கட்டர் மற்றும் நீலிமா அசீம் ஆகியோரின் மகனாவார். இவர்  கடந்த 2005-ஆம் ஆண்டு ”வா லைஃப் ஹோ தோ ஐசி” என்ற படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை, 
நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து  ’பியாண்ட் தி கிளவுட்ஸ்’, ‘தடக்’, ‘தி பெர்ஃபெக்ட் கப்பிள்’, ’தி ராயல்ஸ்’ போன்ற வெப் தொடர்களிலும் படங்களிலும் நடித்துள்ளார். 
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us