/tamil-ie/media/media_files/uploads/2023/08/Rajinikanth.jpg)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் டைரக்ஷனில் ஜெயிலர் படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தை அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இதில் ஒரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்துள்ளார். கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து ஸ்போர்ட்ஸ் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் இருந்து ரஜினியின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகிவிட்டது.
இந்த நிலையில், லைகா நிறுவனம் ஆடிஷன் ஒன்று நடத்துகிறது. இதில், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் பயிற்சிப் பெற்ற நடிகர்கள் கலந்துகொள்ளலாம்.
விருப்பம் உள்ளவர்கள் தங்களின் போட்டோவுடன் கூடிய விவரங்களை 6383386764 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தேர்வாகும் நபர்கள், தலைவர் 170 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கலாம். முன்னதாக லால் சலாம் படத்திற்கும் ரஜினியுடன் நடிக்க ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.