/tamil-ie/media/media_files/uploads/2017/10/arjun-750.jpg)
சமூக வலைதளமான ட்விட்டரில் தன்னை ‘ரேப்பிஸ்ட்’ என ட்ரால் செய்தவருக்கு நடிகர் அர்ஜுன் கபூர் கண்ணித்துடன் பதிலளித்துள்ளார். சமூக வலைதளங்களில் வேடிக்கை என்பதற்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. சமூக வலைதளங்களில் யாரைப் பற்றி யாரும் எளிதாக மோசமான வார்த்தைகளால் விமர்சித்து விட முடியும். சமூக வலைதளங்ளின் வாயிலாக நல்ல விஷயங்கள் பல இருந்தாலும், சில மோசமான செயல்பாடுகளும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிலும், பிரபமானவர்கள் குறித்து தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்யவதையும் கண்டிருப்போம். அப்படி ஒரு சம்பவம் தான் பாலிவுட் நடிகரான அர்ஜுன் கபூருக்கு ஏற்பட்டது.
அர்ஜூன் கபுர் ஒரு ரேப்பிஸ்ட், கிரிமினல் என ட்விட்டரில் ஒருவர் மோசமாக அர்ஜுன் கபூர் குறித்து ட்ரால் செய்துள்ளார். இது போன்ற கமென்ட்ஸ் யாரை வேண்டுமானாலும் எளிதில் கடுப்பேற்றிவிடும் நிலையில், அர்ஜுன் கபூர் கண்ணியமான முறையில் அதற்கு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பதிவில்
அர்ஜுன் கபூர் குறிப்பிட்டுள்ளதாவது: எனது வாழ்நாளில் சந்தித்த தரக்குறைவான ட்ரால் இது தான் என்று நினைக்கிறேன். பெண் ஒருவர் எந்த ஒரு தயக்கம் இல்லாமலும், சர்வ சாதாரனமாக ‘ரேப்பிஸ்ட்’ என்ற சொல்லை பயன்படுத்துவது என்பது ட்ரால் செய்வதாக ஏற்கமுடியாது. இது வேதனையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
This is an all time low at trolling I feel...a woman, a girl shamelssly and causally using the term rapist isn’t trolling it’s saddening... https://t.co/AkcbhkHtOs
— Arjun Kapoor (@arjunk26) October 6, 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.