மூட நம்பிக்கையை ஊக்குவிக்கிறதா காந்தாரா? இயக்குனர் ரிஷப் ஷெட்டி விளக்கம்!

காந்தாரா திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வரும நிலையில், இந்த படம மூட நம்பிக்கையை ஊக்குவிக்கிறதா என்ற கேள்விக்கு ரிஷப் ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

காந்தாரா திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வரும நிலையில், இந்த படம மூட நம்பிக்கையை ஊக்குவிக்கிறதா என்ற கேள்விக்கு ரிஷப் ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
Kantara Chaj

கன்னடத்தில், வெளியாகி இந்திய அளவில் பெரிய வரவேற்பை பெற்ற, காந்தாரா படம் வசூலில் சாதனை படைத்த நிலையில், தற்போது காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம், இந்த படம் மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக இருக்கிறதா என்ற கேள்வியும் இருக்கிறது. இதற்கு படத்தின் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

கன்னட சினிமாவில் தற்போது முக்கிய நட்சத்திரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வரும் இவர், கடந்த 2022-ம் ஆண்டு, காந்தாரா என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்திருந்தார், நிலத்தின் உரிமைக்காக போராடும் பழங்குடியின மக்களின் வாழ்வியலை, தெய்வத்தின் துணையோடு எதிர்கொள்ளும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது.

முதலில் கன்னடாவில் வெளியாக இந்த படம், அதிக வரவேற்பின் காரணமாக மற்ற மொழிகளில், டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி வசூலில் புதிய சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து உடனடியாக காந்தாரா படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் இதன் கதை, காந்தாரா படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், இந்த கதைக்கு முன்பு நடந்தது என்ன என்பது குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 2-ந் தேதி வெளியாக இந்த படம் பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதனிடையே இந்த படம் மூட நம்பிக்கையை ஊக்குவிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கு பதில் அளித்த நடிகரும் இயக்குனருமான ரஷப் ஷெட்டி, இந்த கதையை நம்புகிறவர்களுக்கு ஒரு மாதிரி இருக்கும். நம்பாதவர்களுக்கு வேறு மாதிரி இருக்கும். ஆனால் இந்த படம் மூடநம்பிக்கைக்கு ஆதரவாகவோ அல்லது அல்லது எதிராகவோ இருக்கும் என்பதை நான் சொல்லவில்லை. அந்த காந்தாரா தெய்வத்தை நான் நம்புகிறேன். எனது குடும்பம் தொடர்பான விஷயம் இது. நமக்கு மேல ஒரு பவர்ஃபுல்லான சக்தி இருக்கிறது என்று நான் நம்புகிறேன். 

Advertisment
Advertisements

இதை எல்லோரும் நம்புகிறார்கள். ஆனால் இதை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பார்க்கிறார்கள். அது எனக்கு டென்ஷன் இல்லை. அவர்களை நான் தொடர்ந்து செல்ல மாட்டேன். அது அவர்கள் பார்க்கும் ஒரு பார்வை. அதை நான் மதிக்கிறேன். அதேபோல், எனது நம்பிக்கைக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அதுவும் ஒரு நம்பிக்கை தான். அதை நான் மதிக்கிறேன். எங்களுக்கும் அவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று ரிஷப் ஷெட் கூறியுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: