கன்னட பிக் பாஸ் பிரபலம் ஜெயஸ்ரீ திடீர் தற்கொலை: காரணம் என்ன?

Actor Jayashree Ramaiah dies by suicide :திரைத்துறை நடிகையும், முன்னாள் பிக் பாஸ் (கன்னடம) போட்டியாளருமான ஜெயஸ்ரீ ராமையா இன்று காலை பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

Actor Jayashree Ramaiah dies by suicide :திரைத்துறை நடிகையும், முன்னாள் பிக் பாஸ் (கன்னடம) போட்டியாளருமான ஜெயஸ்ரீ ராமையா இன்று காலை பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
கன்னட பிக் பாஸ் பிரபலம் ஜெயஸ்ரீ திடீர் தற்கொலை: காரணம் என்ன?

திரைத்துறை நடிகையும், முன்னாள் பிக் பாஸ் (கன்னட) போட்டியாளருமான ஜெயஸ்ரீ ராமையா இன்று காலை பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

வீட்டின் அறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பெங்களூரு போலீசார் தெரிவித்தனர். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.

கடந்த ஆண்டு பேஸ்புக்கில் ஜெயஸ்ரீ ராமையா பதிவு செய்த கருத்து கடும் சர்ச்சையாக மாறியது.

ஜூலை 22, 2020 அன்று நடிகர் தனது பேஸ்புக் கணக்கில், “நான் விடை பெறுகிறேன். இந்த f*****g உலகத்துக்கும்  மனச்சோர்வுக்கு நன்றி! " எனத் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

இருப்பினும், ஜெயஸ்ரீ இப்பதிவை உடனடியாக நீக்கியதோடு, “நான் நன்றாக இருக்கிறேன், பாதுகாப்பாக இருக்கிறேன்” என்று ஒரு புதிய பதிவை பகிர்ந்து கொண்டார்.

2017 ஆம் ஆண்டில் வெளிவந்த உப்பு புளி காரம் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இயக்குனர் மகேந்திராவின் பிளாக் என்ற திரைப்படத்திலும் அவர் நடித்தார்.

Sucide

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: