சச்சினை சந்தித்த தனுஷ்

நடிகர் தனுஷ், இன்று சச்சின் டெண்டுல்கரை சந்தித்துப் பேசினார்.

இங்கிலாந்தில் சாம்பியன் டிராபிக்கான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பர்மிங்காமில் நடந்தது.

போட்டியைக் காண நடிகர் தனுஷ் சென்றிருந்தார். வர்ணணையாளராக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சென்றிருந்தார். அவரை மைதானத்தில் உள்ள அறையில் நடிகர் தனுஷ் சந்தித்துப் பேசினார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவ்ட்டரில் வெளியிட்டார்.

அதில், ஒன்லி ஒன் கிரிக்கெட் கடவுள் சச்சினை, ஐஐசி சாம்பியன் டிராபி இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்கும் மைதானத்தில் சந்தித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close