/indian-express-tamil/media/media_files/2025/10/06/bison-dhuru-2025-10-06-21-02-33.jpg)
துருவ் விக்ரம் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பைசன் காலமாடன்' திரைப்படம், தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்தத் திரைப்படம் மூலம் தனது திரை வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தை (reset) ஏற்படுத்த துருவ் விக்ரம் தயாராகிவிட்டார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் துருவ் விக்ரம், தான் ஏற்கனவே 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்கான 'ஆதித்ய வர்மா', மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'மகான்' என இரண்டு முக்கியமான படங்களில் நடித்திருந்தாலும், 'பைசன்' திரைப்படத்தைத் தான் தனது உண்மையான அறிமுகப் படமாகக் கருதுவதாகத் தெரிவித்தார். மேலும், படம் குறித்த தனது நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்தும் அவர் பேசினார்.
இது குறித்து பேசிய அவர், என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் துருவ், இதுவரை இரண்டு படங்களில் நடித்துள்ளேன். அந்த இரண்டு படங்களை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் அது ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால், நீங்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும், ஏனென்றால் நான் இதைத்தான் என்னுடைய முதல் படமாகக் கருதுகிறேன். நீங்களும் அதைப் போலவே பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இந்த படத்திற்காக நாங்கள் உண்மையிலேயே கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் என்னுடைய 100 சதவீத உழைப்பைக் கொடுத்திருப்பதாக நம்புகிறேன். நீங்கள் அனைவரும் திரையரங்கில் படத்தைப் பார்க்கும்போது, நான் 100 சதவீதம் கொடுத்திருக்கிறேனா இல்லையா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்” என்று மேலும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து, 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' போன்ற சமூக அக்கறை கொண்ட படங்களுக்காக அறியப்படும் இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து மிகவும் பெருமையாகப் பேசிய துருவ் விக்ரம் “என்னுடைய இயக்குநர் கடினமாக உழைத்து, மறக்க முடியாத ஒரு படத்தைத் தந்திருக்கிறார்.
இது உங்களைச் சென்றடைந்து, சிந்திக்க வைத்து, உங்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறேன். இதை அடைவதற்காக அவர் மிகவும் போராடியிருக்கிறார். 'பைசன்' தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 17-ஆம் தேதி வெளியாகிறது. நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், என அனைவருடனும் சென்று பார்க்கலாம். தயவுசெய்து சென்று பாருங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
கபடி விளையாட்டைப் பின்னணியாகக் கொண்ட 'பைசன்: காலமாடன்' திரைப்படத்தை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் (Applause Entertainment) நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் லால், பசுபதி, ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
'பைஸன்' திரைப்படம் அக்டோபர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில், பிரதீப் ரங்கநாதனின் 'டூயூட்' (Dude) மற்றும் ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' (Diesel) ஆகிய படங்களும் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.