நகைச்சுவை நடிகர் 'அல்வா' வாசு கவலைக்கிடம்!

சத்யராஜிற்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன்மூலம் அல்வா வாசு எனப் பிரபலமானவர்.

மறைந்த இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘அமைதிப்படை’. இப்படத்தில் சத்யராஜிற்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன்மூலம் அல்வா வாசு எனப் பிரபலமானவர் நடிகர் வாசு.

அதன்பின், வடிவேலுவுடன் இணைந்து இவர் பல காமெடி காட்சிகளில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். இதுவரை 900 படங்களுக்கும் மேல் இவர் நடித்திருக்கிறார்.

இந்நிலையில். கடந்த ஆறு மாதங்களாக கல்லீரல் பாதிப்பால், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், வாசு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், வாசுவின் மனைவி அமுதாவிடம், ‘அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை, விரைவில் உயிர் பிரிந்துவிடும். அதனால் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லலாம்’ என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவர்களுக்கு, கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளார்.

இவர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close