Advertisment

குடிபோதையில் கார் ஒட்டி விபத்து: நடிகர் ஜெய்-க்கு சிறை தண்டனைக்கு வாய்ப்பு?

நடிகர் ஜெய்-யிடம் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லை. ஓட்டுனர் உரிமத்தின் நகல் தான் வைத்துள்ளார். காருக்கான ஆர்.சி.,புத்தகம் இல்லை. இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படவில்லை

author-image
manik prabhu
Sep 23, 2017 09:32 IST
குடிபோதையில் கார் ஒட்டி விபத்து: நடிகர் ஜெய்-க்கு சிறை தண்டனைக்கு வாய்ப்பு?

குடி போதையில் கார் ஒட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய்-க்கு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

சென்னை-28, சுப்ரமணியபுரம், கோவா உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஜெய். இவரது அடுத்த படமான 'பலூன்' விரைவில் ரிலீசாக உள்ளது. இவர் இரு தினங்களுக்கு முன்னர் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நண்பர்களுடன் தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாரில் உள்ள மலர் மருத்துவமனை அருகே உள்ள பாலத்திற்கு கீழே தடுப்புச் சுவரில் அவரது கார் மோதி விபத்துக்குள்ளானது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், நடத்திய விசாரணையில் நடிகர் ஜெய் குடித்திருந்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் ஜெய் கைதாகி பின் விடுதலையானார். ஆனால், ஏற்கனவே அவர் மீது இதேபோன்று குடி போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக இரு வழக்குகள் கிண்டி மற்றும் அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் பதிவி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அவர் அபராதம் கட்டியுள்ளார் என போக்குவரத்து காவல் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இநிலையில், மூன்றாவது முறையாக குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய் சிக்கியுள்ளார். எனவே, தற்போது உள்ள நடைமுறைகளின் படி, அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், அவரிடம் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லை. ஓட்டுனர் உரிமத்தின் நகல் தான் வைத்துள்ளார். அவரது காருக்கான ஆர்.சி., புத்தகமும் இல்லை. அதேபோல் இன்சூரன்சும் புதுப்பிக்கப்படவில்லை, காரின் நம்பர் பிளேட்டும் கூட விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொரப்படும் எனவும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை அவ்வாறு வழக்கு தொடரும் பட்சத்தில் நடிகர் ஜெய்-க்கு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

#Premji #Jai #Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment