கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி மேடையில் மனம் உருகி பேசிருப்பது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றி:
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றி எனப்து அனைவருக்கும் தெரிந்த ஒன்று. குடும்பங்கள் கொண்டாடும் படமாக போற்றப்பட்ட கடைக்குட்டி சிங்கம் 2018 ஆம் ஆண்டின் பாக்ஸ் ஆபிஸிலும் இடம்பெற்றது.
அதைத்தவிர படத்தை பார்த்த பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கார்த்தியின் நடிப்பை புகழ்ந்து பாராட்டி இருந்தனர். குறிப்பாக படத்தை பார்த்த பலரின் விமர்சனமும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு குடும்ப படம் பார்த்த உணர்வு கிடைத்ததாக கூறியிருந்தனர்.
நடிகர் கார்த்தி:
இந்நிலையில், உத்தரவு மகாராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட கார்த்தி தனது சினிமா பயணம் குறித்து உருக்கமான பல தகவல்களை பகிர்ந்துள்ளார் விழாவில் கார்த்தி பேசியதாவது,” சினிமாவில் புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். இந்த துறையில் ஓடுகிற குதிரையில்தான் பணம் கட்டுவார்கள்.
என்னைம், அண்ணா சூர்யாவை பற்றி பலபேர் இதுவரை நிறைய விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சினிமாவுக்குள் எங்கள் இருவரையும் அப்பா எளிதாக கொண்டு வரவில்லை. நானும் சூர்யாவும் இங்கு வருவதற்கு பல போராட்டங்களுடன் பொறுமையாக காத்திருந்தோம்.
ஒரு நடிகனின் முதல் வெற்றிக்கும் அடுத்த வெற்றிக்கும் இடையில் பெரிய காத்திருப்பு உள்ளது. சிறுத்தைக்கு பிறகு நான் சமீபத்தில் நடித்து வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்து தான் பலரும் நான் சிறப்பாக நடித்து இருக்கிறேன் என்று கூறினார்கள், இடையில் எவ்வளவோ படம் நடித்தேன். ஆனாலும் கடைக்குட்டி சிங்கம்தான் சிறந்த படம் என்கின்றனர் மக்கள். இந்த வார்த்தையை கேட்பதற்கு 8 வருடங்கள் ஆகி இருக்கிறது.” என்று உருக்கமாக பேசி இருந்தார்.
கார்த்தியின் இந்த பேச்சு பலரையும் திகைக்க வைத்துள்ளது. குறிப்பாக கோலிவுட்டில் இருக்கும் மூத்த பிரபலங்கள் பலரும் கார்த்தியின் பேச்சை மனதார பாராட்டியுள்ளனர்.