கவினுடன் ஜோடி சேரும் நயன்தாரா - மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு

நடிகர் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது

நடிகர் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது

author-image
Nagalekshmi Rajasekar
New Update
NAYAN

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். பிரபல தொலைக்காட்சியில் வெளியான ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் நடிகர் கவின் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர், அதே தொலைக்காட்சியில் வெளியான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையனாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். தொடர்ந்து, ‘பீட்சா’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Advertisment

இதையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு சிவா அரவிந்த் இயக்கத்தில் வெளியான ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து, தனது திரைப்பயணத்தை தொடர்ந்த நடிகர் கவின் தமிழில் ஒளிப்பரப்பாகி வரும்  ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். இது கவினுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

பிக்பாஸிற்கு பிறகு 'லிஃப்ட்' என்ற படத்தில் நடித்தார். ஓடிடி- யில் மட்டும் வெளியான 'லிஃப்ட்' திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து 'ஸ்டார்', 'கிஷ்', 'டாடா', 'ப்ளடி பக்கர்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில், ‘டாடா’ திரைப்படம் கவினின் சினிமா கேரியருக்கு மேலும் பெருமை சேர்த்தது.

நடிகர் கவின் தற்போது இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சத்யராஜ் உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

இந்த நிலையில், விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் புதிய படத்தின் அப்டேட் இன்று மாலை 05.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கவின் - நயன்தாரா நடிக்கும் படத்திற்கு ‘ஹாய்’ (Hi) என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இதுதொடர்பான போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சுந்தர் சி இயக்கும் இந்த படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகை நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara Biggboss Kavin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: