/tamil-ie/media/media_files/uploads/2017/10/z482.jpg)
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வடசென்னை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனைத் தொடர்ந்து 'மாரி 2' படப்பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.
இம்மாதம் தொடங்கும் 'மாரி 2' படத்தை பாலாஜி மோகன் இயக்க, தனுஷ் தயாரிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷ், முதற்பாகத்தின் கதாபாத்திரம் போலவே ரோபோ ஷங்கர் மற்றும் வில்லனாக டோவினோ தாமஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
முதல் பாகத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்தில், சாய்பல்லவி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இசையமைப்பாளர் மற்றும் இதர கதாபாத்திரங்களை முடிவு செய்வதில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியிலும் இயக்குநர் பாலாஜி மோகன் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், மாரி 2-ஆம் பாகத்தில் இரண்டாவது லீட் ரோலாக நடிக்க நடிகர் கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை இயக்குனர் பாலாஜி மோகன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து கிருஷ்ணாவின் கேரக்டர், தனுஷின் தம்பி கேரக்டரா இருக்குமோ, வில்லன் கம் நண்பன் கேரக்டரா இருக்குமோ, அல்லது மெயின் வில்லனே இவர் தானோ என்று தனுஷ் ரசிகர்கள் இப்போதே ட்வீட் செய்யத் தொடங்கிவிட்டனர்.
Very happy to have @Actor_Krishna on board for a Second-Lead Role in #Maari2 ???? The #Maari franchise welcomes u bro! ???? Excited! #Krishnapic.twitter.com/16rbPMLmJd
— Balaji Mohan (@directormbalaji) 6 October 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.