scorecardresearch

நடிகர் மனோபாலாவுக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி

நடிகர் மனோபாலா மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Actor Mano Bala suffers heart attack admitted to hospital
நடிகர் மனோ பாலா மருத்துவமனையில் அனுமதி

நடிகர் மனோபாலா, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக நடிகர் மனோபாலாவிற்கு வியாழக்கிழமை (ஜன.26) லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு வலி அதிகமாகவே அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகிறார். அவரை மருத்துவமனையில் நடிகர் பூச்சி முருகன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் பிரபலங்கள் பலரும் மனோ பாலா குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள மனோ பாலா, ஒரு பிரபலமான இயக்குனர் ஆவார்.

இவர் தற்போது தனது சொந்த யூடியூப் சேனல் வாயிலாக பிரபலங்களை பேட்டி எடுத்தும், சினிமாவில் நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor mano bala suffers heart attack admitted to hospital