படத்துக்கு 3 வில்லன், ஆன உங்களுக்கு வாய்ப்பு இல்ல: ராதாரவியை வீட்டுக்கு அழைத்து சொன்ன ரஜினிகாந்த்!

படத்தில் வாய்ப்பு இல்லை என்பதை நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு அழைத்து சொன்னதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

படத்தில் வாய்ப்பு இல்லை என்பதை நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு அழைத்து சொன்னதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
rajni

படத்துக்கு 3 வில்லன், ஆன உங்களுக்கு வாய்ப்பு இல்ல: ராதாரவியை வீட்டுக்கு அழைத்து சொன்ன ரஜினிகாந்த்!

நடிகர் ராதா ரவி தமிழ் திரைப்படத்துறையில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளவராக அறியப்படுகிறார். புகழ்பெற்ற நடிகரும் அரசியல்வாதியுமான எம்.ஆர். ராதாவின் மகனாகப் பிறந்த அவர், திரையுலகில் தந்தையின் தாக்கத்தை தாண்டி, தன்னை ஒரு தனிப்பட்ட நடிகராக நிறுவியவர். 

Advertisment

1970-களின் இறுதியில் சினிமாவில் அறிமுகமான ராதா ரவி, 1980 மற்றும் 1990-களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் சிறந்து விளங்கினார். அவரது தனித்துவமான குரலும், மேடை போல் பேசும் பாணியும், பல படங்களில் அவரது பாத்திரங்களை மறக்க முடியாதவையாக மாற்றின.

‘வைத்தேகி காத்திருந்தாள்’, ‘புலன் விசாரணை’, ‘அமைதி படை’, ‘பாஷா’, ‘செத்துப்பதி ஐ பி எஸ்’, ‘சின்ன தம்பி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் ஒரு திறமையான டப்பிங் கலைஞராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

மலையாளம் மற்றும் தெலுங்கில் இருந்து தமிழுக்கு பல நடிகர்களுக்கான குரலை கொடுத்துள்ளார். திரையரங்க சங்கங்களில் இயங்கிய அனுபவம், அவரது தொழில்முறை அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் உறுப்பினராகவும், செயல்பாடுகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளார்.

Advertisment
Advertisements

அவருடைய நேரடியான பேச்சுகள் சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், தனது கருத்துகளில் உறுதியுடன் நிலைத்திருந்தவர். வில்லனாக, தந்தையாக, அதிகாரியாக, அரசியல்வாதியாக என பலவிதமான கதாபாத்திரங்களில் கலையாற்றிய ராதா ரவியின் சினிமா பயணம், தமிழ் திரையுலகத்தில் முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது. 

இந்நிலையில் நடிகர் ராதா ரவி, ‘அண்ணாமலை’ படத்தில் தனக்கு வாய்ப்பு இல்லை என்று ரஜினி வீட்டிற்கு அழைத்து சொன்னதாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “நான் ‘மன்மத லீலை’ படத்தில் நடிக்கும் பொழுது கமலை பார்க்க ரஜினி வந்திருந்தார். 

அப்போது ரஜினியிடம் என்னைய வேண்டும் என்று கேட்டேன் அதற்கு அவர் கமலை பார்க்க வந்திருப்பதாக கூறினார்.  அப்படிதான் நான் ரஜினி சாரை பார்த்திருக்கிறேன். ’அருணாச்சலம்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் பி.வாசு கூறினார். 

நான் சரி என்று சொல்லிவிட்டு கன்னட படம் நடிக்க சென்றேன். அப்போது நடிகர் ரஜினி போன் செய்தார் வீட்டிற்கு வந்துவிட்டு செல்ல முடியுமா என்று கேட்டார். நானும் சென்றேன். காலையில் எட்டு மணிக்கு எனக்கு மதுவை ஊற்றிக் கொண்டே ‘அருணாச்சலம்’ படத்தில் நீங்கதான் வில்லனா நடிக்கிறீர்கள் என்று ஒரு பைல் எடுத்து காண்பித்தார். 

பின்னர், இயக்குநர் பி.வாசு அந்த படத்தை இயக்கவில்லை. சுந்தர் சி இயக்குகிறார். அதுமட்டுமல்லாமல், படத்தில் மூன்று வில்லன்கள் இருக்கிறார்கள். நீங்க வில்லன் கதாபாத்திரம் செய்தால் நன்றாக இருக்குமா என்று தெரியவில்லை. அதனால் வில்லனாக வேறு நபர்களை போட்டிருக்கிறோம் என்றார்.

இதை கேட்ட நான் சினிமாவின் தலையெழுத்து என்ன தெரியுமா சார் என்று கேட்டேன். அதற்கு அவர் என்ன என்றார். நான் இந்த திறமை இந்த அதிர்ஷ்டத்தை தேடி வரவேண்டியதா இருக்கு இதுதான் சினிமா என்றேன்” என்று கூறினார்.

Rajini Radharavi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: