scorecardresearch

மகள் இயக்கத்தில் ரஜினிகாந்த் புதிய படம் : பூஜையுடன் தொடக்கம்

கடந்த 2012-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

மகள் இயக்கத்தில் ரஜினிகாந்த் புதிய படம் : பூஜையுடன் தொடக்கம்

தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் தான் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் ஏற்கனவே கோச்சடையான் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே தற்போது தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தொற்றத்தில் நடிக்க உள்ளதா தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதனை நடிகர் ரஜினிகாந்தும் உறுதி செய்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை படத்தை இயக்கினார். அதன்பிறகு சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கிய ஐஸ்வர்யா, அடுத்து ஒரு ஆல்பம் பாடலை இயக்கினார். இதனிடையே தற்போது ஐஸ்வர்யா 7 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் முழுநீள படத்தை இயக்க உள்ளார்.

லால் சலாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ராந்த், விஷ்னு விஷால் ஆகியோர் நடிக்க உள்ள நிலையில் ரஜினிகாந்த் சிறப்பு தொற்றத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

ஏற்கனவே தனது 2-வது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் படத்தில் நடித்த ரஜினிகாந்த் தற்போது தனது மூத்த மகள் இயக்கத்தில் நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor rajinikanth in his daughter aishwarya new movie laal salaam guest role

Best of Express