Advertisment

முத்துவேல் பாண்டியன் பராக்... ரஜினியின் ஜெயிலர் மாஸ் அப்டேட்

அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது நெல்சன் இயக்குனம் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
முத்துவேல் பாண்டியன் பராக்... ரஜினியின் ஜெயிலர் மாஸ் அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரபமுகர்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்ளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் தொடர்ந்து வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து 1978-ம் ஆண்டு வெளியான பைரவி படத்தின் மூலம் தனி ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் தனது ஸ்டைலால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரஜினிகாந்த் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.

இவரது பட்ங்கள் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், ஜப்’பான் போன்ற வெளிநாடுகளில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். அன்றைய இயக்குனர்கள் தொடங்கிய தற்போதைய இளம் இயக்குனர்கள் வரை பலருடன் இணைந்து பணியாற்றியுள்ள ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது நெல்சன் இயக்குனம் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

முழுவதும் ரஜினிகாகவே வெளியிடப்பட்டுள்ள இந்த டீசரில் டார்க் ரூமில் வெளியில் செல்வதற்காக கிளம்பும் ரஜினிகாந்த், டீசரின் இறுதியில் ஒரு பெரிய கத்தியை எடுத்துகொண்டு சிரிக்கிறார். அத்துடன் டீசர் முடிகிறது. இந்த டீசர் மூலம் ஜெயிலர் படத்தின் ரஜினிகாந்தின் பெயர் முத்துவெல் பாண்டியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment