/indian-express-tamil/media/media_files/2025/11/02/raji-2025-11-02-14-52-11.jpg)
1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான ரஜினிகாந்த், அதன்பிறகு, தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், இன்றும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக பல படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார். இளம் இயக்குநர் படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்ததைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் நடித்து வருகின்றனர். ’ஜெயிலர் 2’ திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிக்கு பெண் தருவதற்கு எம்.ஜி.ஆர் சிபாரிசு செய்ததாக அவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “எம்.ஜி.ஆர் என்னிடம் எப்போது கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று கேட்டார். நான் பொண்ணு பார்க்கவில்லை என்று கூறினேன். அதற்கு அவர் நல்ல குடும்ப பொண்ணா பார்த்து திருமணம் செய்து கொள். பொண்ணு பார்த்தால் என்னிடம் வந்து சொல்லனும் நான் கல்யாணத்திற்கு வருவேன் என்று சொன்னார். அதன்பிறகு என் மனைவி லதாவை பொண்ணு பார்த்தேன். நான் என் அண்ணாவிடம் கூட முதலில் சொல்லவில்லை எம்.ஜி.ஆரிடம் தாம் சொன்னேன் பொண்ணு பார்த்திருக்கேன் என்று.
அதன்பிறகு சில மாதங்கள் ஆனது. லதா வீட்டில் சினிமாக்காரன் என்பதால் எனக்கு பொண்ணுதர ஒப்புக் கொள்ளவில்லை. ஆறு மாதத்திற்கு பிறகு என்னிடம் எம்.ஜி.ஆர் திருமணம் குறித்து கேட்டார். அதன்பிறகு வை.ஜி.பியின் உறவினர் தான் என்னுடைய மனைவி லதா. எம்.ஜி.ஆர், வை.ஜி.பிக்கு போன் செய்து ஏன் தயங்குறீங்க. நல்ல பையன். உங்க பொண்ண நல்ல வச்சு பாத்துப்பான் என்று சொன்னார். நான் வாழ்க்கையில் நல்லா இருப்பதற்கு காரணமே எம்.ஜி.ஆர் தான்” என்றார்.
நடிகர் எம்.ஜி.ஆர், கவிஞர் வாலியிடம் பெண் பார்த்ததும் என்னிடம் தான் சொல்ல வேண்டும். நான் தான் உன் திருமணத்தை நடத்துவேன் என்று கூறியிருந்தார். ஆனால், வாலி தனது காதலியை யாரிடமும் சொல்லாமல் திருமணம் செய்துக் கொண்டார். இதை தகவலை செய்தி தாளில் பார்த்த எம்.ஜி.ஆர், கவிஞர் வாலியிடம் பல நாட்கள் பேசாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us