/indian-express-tamil/media/media_files/2025/10/08/vikram-2025-10-08-20-08-39.jpg)
நடிகர், இயக்குநர், கதையாசிரியர் என்ற பன்முகத் தன்மை கொண்ட ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் தவிர்க்க முடியாத இயக்குநராகஎ வலம் வருகிறார். 'துக்ளக்’, ‘உலிதவரு கண்டந்தே’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘ரிக்கி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘கிரிக் பார்ட்டி’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
ரிஷப் ஷெட்டி இயக்கிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு ‘காந்தாரா’ திரைப்படத்தை இயக்கி நடிக்கவும் செய்தார். இப்படம் முதலில் கன்னடத்தில் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பான் இந்தியா மொழியில் டப் செய்யப்பட்டு திரையிடப்பட்ட நிலையில் வசூலை குவித்தது.
ரூ.16 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. ‘காந்தாரா’ திரைப்படம் முதலில் சீக்குவலாக வெளியான நிலையில் தற்போது அப்படத்தின் ப்ரீக்குவல் வெளியாகி உள்ளது. அதாவது ‘காந்தாரா சாப்டர் 1’ அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகி வசூலை குவித்து வருகிறது.
இப்படம் 6 நாட்களில் உலக அளவில் ரூ. 427.5 கோடியை வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலானது. அதுமட்டுமல்லாமல், ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்துள்ளது. விரைல் ஆயிரம் கோடி வசூலை எட்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் ரிஷப் ஷெட்டி தனக்கு பிடித்த தமிழி பாடல்கள் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதவது, ”தமிழ் பாடல்கள் நிறைய எனக்கு பிடிக்கும். நடிகர் மோகனை ‘கோகிலா’ மோகன் என்று அழைப்போம். அவருடைய பாடல் மிகவும் பிடிக்கும். இளையராஜா மற்றும் அனிருத் பாடல்கள் ரொம்ப பிடிக்கும். ‘பிதாமகன்’ படத்தில் இடம்பெற்றிருந்த ’இளம் காற்று வீசுதே’ பாடல் எனக்கும் என் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்த பாடல்” என்றார்.
கடந்த 2003-ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பிதாமகன்’. இந்த படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. நடிகர் விக்ரமின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.