ஈசிஆரில் சேதுராமனின் ஜி (ZI) கிளினிக்கின் கிளையை அவர் பிறந்த தினமான இன்று நடிகர் சந்தானம் திறந்து வைத்தார்.
தோல் சிகிச்சை டாக்டரான சேதுராமன், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த இவர்,மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றவர். சினிமாவில் கவனம் செலுத்திய இவர், வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50-50 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கடந்த மார்ச் 26ம் தேதி இரவு மாரடைப்பு காரணமாக சேது ராமன் இறைவனடி சேர்ந்தார். அவரின் இறப்புச்செய்தி, திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஈசிஆரி-ல் ஜி கிளினிக்கின் கிளையைத் திறக்கும் சேதுராமனின் கனவை அவரின் துணைவியார் உமையாள் சேதுராமன் தற்போது நிறைவேற்றியுள்ளார். 2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ‘ஜி கிளினிக்’ அண்ணாநகர், போயஸ் கார்டன் ஆகிய இரண்டு இடங்களில் கிளைகளைக் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Very happy to launch my Dearest Friend Dr.Sethuraman s ZI CLINIC in ECR on his birth anniversary ???????????? @ZI_Clinic #ECRZIClinic pic.twitter.com/OSG0qbKdhI
— Santhanam (@iamsanthanam) October 29, 2020
கிளினிக் திறப்பது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவித்த நடிகர் சந்தானம், ” அன்புக்குரிய என் நண்பர் டாக்டர் சேதுராமனின் ZI CLINIC ஐ அவரது பிறந்த நாளில் ஈ.சி.ஆரில் திறந்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி ” என்று பதிவிட்டார்.