தூக்கம் வரலனு கேட்ட கதை, 2 முறை சொல்லி 3-வது முறை படமானது: சிவாஜி ஐகானிக் படம் உருவானது இப்படித்தான்!

நடிகர் சிவாஜி கணேசனின் ஐகானிக் படம் எப்படி உருவானது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் சிவாஜி கணேசனின் ஐகானிக் படம் எப்படி உருவானது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
shivaji 1

தூக்கம் வரலனு கேட்ட கதை, 2 முறை சொல்லி 3-வது முறை படமானது: சிவாஜி ஐகானிக் படம் உருவானது இப்படித்தான்!

நடிகர், இயக்குநர், கதையாசிரியர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர் வியட்நாம் வீடு சுந்தரம். தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் திரைக்கதை எழுதியுள்ளார். சிவாஜி கணேசனின் விருப்பமான கதையாசிரியர்களுள் இவரும் ஒருவர்.

Advertisment

இவர், கெளரவம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் குடும்பம் தொடர்பான கதைக்களமாகவே இருக்கும். இவரது கதைகள் தமிழ் மட்டுமின்றி இதர மொழிகளிலும் படமாக்கப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் ‘கெளரவம்’ திரைப்படம் உருவானது குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, ”அப்போதெல்லாம் மதிய உணவு முடிந்ததும் நடிகர் சிவாஜி ஒரு மணிநேரம் தூங்குவார். 

ஒரு நாள் தூக்கம் வரவில்லை என்று சிவாஜி கணேசன் என்னை அழைத்து கதை சொல்ல சொன்னார். 
நானும் கதை சொன்னேன். இந்த கதையை அடிக்கடி கூறு நல்ல தூக்கம் வருது என்று சிவாஜி சொன்னார். ஒரு இரண்டு, மூன்று நாட்கள் கழித்து அந்த கதையை திரும்ப கூறு என்றார்.

Advertisment
Advertisements

நான் விளையாட்டாக சொன்னேன் இப்படி அடிக்கடி அழைத்து கதை கேட்பதற்கு அதை படமாக எடுக்கலாம் என்றேன். அந்த நேரம் இடையில் வெளியில் போய்யிருந்தேன். அப்போது ஹிண்டு ரங்கராஜன் உடன் வந்திருந்தார். அப்போது, அவர் பேசாமல் ஒரு படம் எடு என்றார்.

நான் இப்பதான் சிவாஜியே கேட்டேன் என்றேன். அவர் அப்ப பண்ணிட வேண்டியது தானே என்றார். பின்பு வியட்நாம் வீடு சுந்தரம், வின்செட், விஸ்வநாதன் ஆகிய மூன்று ‘வி’ முயற்சியில் உருவான திரைப்படம் தான் ‘கெளரவம்’ திரைப்படம்” என்றார்.

'கௌரவம்' திரைப்படத்தில் சிவாஜி கணேசன் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்தார். ஒரு நேர்மையான, கண்டிப்பான வழக்கறிஞர் மற்றும் அவருடைய சுதந்திர எண்ணம் கொண்ட மகனுக்கும் இடையே நடக்கும் மோதல்களே இப்படத்தின் மையக்கருத்து. 

இந்தத் திரைப்படம் 'வியட்நாம் வீடு' நாடகத்தைப் போலவே பெரிய வெற்றிபெற்றது. இப்படம் இன்றும் மிகவும் பிரபலமாக உள்ளது.

Cinema shivaji

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: