/indian-express-tamil/media/media_files/2025/10/01/ganesh-2025-10-01-16-08-06.jpg)
குண்டுவெடிப்பில் கேட்ட சத்தம்... ஓடி வந்த டி.ஆர்; அள்ளிக்கொடுத்த எம்.ஜி.ஆர்: சொல்லும் சங்கர் கணேஷ் மகன்
தமிழ் சினிமாவில் 70-80 களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் சங்கர் கணேஷ். 'பருத்தி எடுக்கயில', 'பட்டு வண்ண ரோசாவாம்', 'ஒரே ஜீவன்', 'பட்டுக் கோட்ட அம்மாலு', ’கொண்ட சேவல் கூவும் நேரம்' என எண்ணற்ற எவர்கிரீன் பாடல்களைத் தந்தவர் தான் இவர்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் பலருடன் சங்கர் கணேஷ் பயணித்துள்ளார்.
கழுத்து நிறைய நகைகள் கையில் கிளவுஸ் இவைதான் சங்கர் கணேஷின் அடையாளம். முதுமையை அடைந்த சங்கர் கணேஷ் எப்போதாவது மேடையேறிப் பாடுவது உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன் இதயத்தில் பிரச்னை வந்ததால் 'பாட வேண்டாம்' என மருத்துவர்கள் ஆலோசனைகள் கூறியதை அடுத்து இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், தனது தந்தை குறித்து நடிகர் ஸ்ரீ குமார் மனம் திறந்துள்ளார்.
அவர் பேசியதாவது, “1996-ஆம் ஆண்டு நானும் என் அப்பாவும் சபரிமலைக்கு மாலை போட்டுவிட்டு வீட்டிற்கு வந்தோம். நான் பள்ளிக்கு சென்றுவிட்டேன். அப்போது எங்கள் வீட்டிற்கு ஒரு பார்சல் வந்திருந்தது. அந்த பார்சல் இரண்டு தடவை எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டு ரிட்டன் ஆகியுள்ளது.
அதை என் அப்பா வாங்கி திறந்து பார்த்திருக்கிறார். அதில் எதோ பொருள் இருந்துள்ளது. அதை எடுத்து என் அப்பா பார்த்துக் கொண்டிருந்த போது அது வெடித்துவிட்டது. வீட்டின் சுவரில் எல்லாம் ரத்தமும், சதையுமாக இருந்தது.
வெடிகுண்டு வெடித்த சத்தம் டி.ராஜேந்திரன் வீடு வரைக்கும் கேட்டிருக்கிறது. அந்த சமயத்தில் முதலில் வந்தது டி.ராஜேந்திரன் சார் தான். அந்த நேரம் வெடி குண்டு வெடிப்பு என்று சொல்கிறார்கள்.
நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேம்.
குண்டு வெடிப்பு என்றால் என்னவென்று கூட தெரியவில்லை. என் அப்பாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருந்தபோது எம்.ஜி.ஆர் வந்திருந்தார். வெடி குண்டு வெடிப்பின் போது என் அப்பாவின் கை, கால் விரல்கள் எல்லாம் போய்விட்டது.
என் அப்பாவின் சிகிச்சைக்காக என் அம்மா ஒவ்வொரு நிலத்தையும் விற்றார். இது எம்.ஜி. ஆருக்கு தெரிந்துவிட்டது. அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மா போன் செய்து வீட்டிற்கு வருமாறும் என் அம்மாவை அழைத்தார்.
அதன்பின்னர். எம்.ஜி.ஆர் எங்களுக்காக ரூ. 10 லட்சம் கொடுத்தார். அதில் தான் என் அம்மா மூன்று ஃபிளாட்” வாங்கினார். அதில் ஒன்றில் தான் நான் இப்போது இருக்கிறேன். நான் இன்றும் பெருமையாக சொல்வேன். நான் இருக்கும் வீடு எம்.ஜி.ஆர் வாங்கிக் கொடுத்தது என்று” என பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.