”தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்”: ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்

”தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம்”, என நடிகர் சூர்யா தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம்”, என நடிகர் சூர்யா தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றின் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யா குறித்து கேலி பேசியதற்கு, அவரது ரசிகர்கள் எதிர்வினையாற்றிவரும் நிலையில், சூர்யா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக் தொகுப்பாளினிகள் இருவர், நேரலை நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து கேலியாக பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து, தொகுப்பாளினிகளின் இந்த பேச்சுக்கு சூர்யாவின் ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். மேலும், அவரது ரசிகர்கள் சிலர் சன் தொலைக்காட்சி நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ”தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம்”, என நடிகர் சூர்யா தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சூர்யா, “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற.”, என பதிவிட்டுள்ளார்.

×Close
×Close