துணிவா? வாரிசா? முதலில் எதைப் பார்ப்பீங்க.. மாமன்னன் எப்படி இருக்கு? வடிவேலு பதில்!

வாரிசா, துணிவா முதலில் எந்தப் படத்தை பார்ப்பீங்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த நகைச்சுவை புயல் வடிவேலு, மாமன்னன் படம் குறித்த அப்டேட்-ஐயும் கொடுத்தார்.

Actor Vadivelu darshan at Tiruchendur Murugan Temple
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில், வைகோ புயல் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம், “திருச்செந்தூர் முருகனை பார்த்தது மனதுக்கு ரொம்ப ஆறுதலாக உள்ளது. இந்த முருகனை வணங்கும் போது மக்களின் கஷ்டங்கள், குறைகள் எல்லாம் தீரும்” என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் பொங்கலுக்கு வெளிவரவுள்ள துணிவு, வாரிசு படத்தில் எதனை முதலில் பார்ப்பீர்கள் எனக் கேள்வியேழுப்பினார்கள்.
அதற்கு வடிவேலு, “எனக்கு அதப்பத்தி தெரியலீயே. எல்லாப் படமும் ஓடணும். தயாரிப்பாளர் நல்லா இருக்கணும், சினிமா ஓடினால்தான் தொழிலாளர்கள் நல்லா இருக்க முடியும். அதனால்தான் எல்லா படமும் ஓடணும்” என்றார்.

நாய் சேகர் ரிட்டன் படம் குறித்து கூறுகையில், “அது குடும்ப படம். மக்கள் குழந்தை, மனைவியோடு படம் பார்த்த விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.
அந்தப் படம் தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது” என்றார். தொடர்ந்து, உதயநிதியின் கடைசி படம் என்று கூறப்படும் மாமன்னன் குறித்து அவரிடம் கேட்டார்கள்.
“அதற்கு அது நல்ல படம். ரொம்ப நல்லா வந்துள்ளது” என வடிவேலு பதிலளித்தார். மேலும் பாடல்கள் மூலம் விஜய்-அஜித் ரசிகர்கள் மோதிக் கொள்வது, சிங்கமுத்து தொடர்பான கேள்விகளை அவர் தவிர்த்துவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor vadivelu darshan at tiruchendur murugan temple

Exit mobile version