பேனர் இல்லை.. பிரபலங்களுக்கு அழைப்பு இல்லை.. எளிமையாக நடந்த வடிவேலு வீட்டு திருமணம்!

செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக இருந்த நகைச்சுவை புயல் வடிவேலுவின் மகள் திருமணம் மதுரையில் எளிமையாக நடைப்பெற்றது.

வடிவேலு வீட்டு திருமணம்:

திரையில் தோன்றி நம் அனைவரையும் வயிறு குலுங்க  சிரிக்க வைத்த  நகைச்சுவை புயல் வடிவேலு  இன்று திரையிலியே தோன்றாமல் இருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, மீண்டும் வடிவேலு வரமாட்டாரா?  வச்சி செய்ய மாட்டாரா? என்று ஏங்காத ரசிகர்களே இல்லை.

சமீபத்தில் அவரின் பிறந்த நாள் அன்றூ கூட சமூகவலைத்தளங்களில் அவர் குறித்த மீம்ஸ்கள் பறந்தன.  இந்நிலையில் நேற்று   அவரின் இல்லத்திருமணம்  விழா மதுரையில் மிகவும் எளிமையாக நடைப்பெற்றது.

வடிவேலுவின் மகள் கலைவாணிக்கு ராமலிங்கம் என்பவருடன் மதுரையில் திருமணம் நடந்துள்ளது. அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது தான் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.   மண்டபம் சுற்றிலும் போஸ்டர்களோ, பேனர்களோ, கவுட் அவுட்களோ இல்லை.  அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என எவருக்குமே அழைப்பு விடுக்கப்படவில்லை. சுற்றிலும் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   கடந்த 2014 ஆம் ஆண்டு வடிவேலுவின் மூத்த மகன் சுப்பிரமணியனுக்கு திருமணம் நடந்தது. மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த இந்தத் திருமணத்துக்கு திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பிரமாண்ட ஏற்பாடுகள் இல்லாமல் அமைதியாக நடந்தது. அதேபோன்று, தன் மகளின் திருமணத்தையும் எளிமையாக நடத்தி முடித்திருக்கிறார் வடிவேலு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close