தளபதி விஜய் அம்மா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அப்பாவின் பிறந்த நாளை கண்டுகொள்ளாத விஜய் அம்மாவின் பிறந்த நாளையாவது கண்டுகொண்டாரா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனாக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழ் தெலுங்கு, கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ளார். சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தின் மூலம் தனது இயக்குனர் பணியை தொடங்கிய அவர், தற்போது சமுத்திரக்கனியை வைத்து நாள் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இயக்கம் மட்டுமல்லாது நடிப்பிலும் அசத்தி வரும் எஸ்.ஏ.சி. தற்போது பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் தனது மகன் விஜயின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டி எஸ்.ஏ.சி, மகன் விஜய் நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
ஆனால் சமீப காலமாக எஸ்.ஏ.சி. விஜய் இருவரும் பேசிக்கொள்வதில்லை. அப்பா மகன் இடையே சிறிய கனக்கஷ்டம் என்று கூறி வந்தாலும், சமீபத்தில் தனது 81-வது பிறந்த நாளை கொண்டாடிய எஸ்.ஏ.சிக்கு விஜய் வாழ்த்து சொல்லவும் இல்லை. அவர் கேக் வெட்டும்போது பக்கத்திலும் இல்லை.
எஸ்.ஏ.சி மற்றும் அவரது மனைவி ஷோபா என இருவர் மட்டுமே கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து, திருக்கடையூர் கோவிலுக்கு சென்ற எஸ்.ஏ.சி சதாபிஷேக பூஜை செய்தார். பிள்ளைகள் நடத்தி வைக்க வேண்டிய இந்த பூஜையில் விஜய் இல்லாமல் எஸ்.ஏ.சி தனது மனைவி ஷோபாவுடன் மட்டுமே கலந்துகொண்டார்.
இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தந்தை மகன் இடையே அப்படி என்னதான் பிரச்சினை என்று கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர் இன்னும் சிலர் பெற்ற அப்பா அம்மாவை சந்தோஷப்படுத்தாத விஜய் யாருடைய சந்தோஷத்திற்காக படங்களில் நடிக்கிறார் என்று கேட்டு வருகின்றனர். ஆனால் இதை மறுத்த எஸ்ஏசி மகன் விஜய் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் விழாவில் பங்கேற்வில்லை என்று கூறியிருந்தார்.
இதனிடையே நேற்று விஜயின் அம்மா ஷோபா தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடினார். மெல்லிசை இசைக்குழுவில் பாடகராக உள்ள ஷோபா, ஏராளமாக படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மேலும் விஷ்னு உள்ளிட்ட சில படங்களில் தனது மகன் விஜயுடன் இணைந் பாடல் பாடியுள்ள ஷோபா, ஆரம்பகாலத்தில் விஜய் நடிப்பில் எஸ்ஏசி இயக்கிய பல படங்களுக்கு கதை எழுதியுள்ளார்.
மேலும் பல இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ள ஷோபா சமீபத்தில் ஆனைமுகனே ஆறுமுகனே என்ற பக்தி பாடல்கள் தொகுப்பை வெளிட்டிருந்தார். இதனிடையே மனக்கசப்பு காரணமாக தந்தையிடம் பேசாத விஜய் தாய் ஷோபாவுடன் மட்டும் பேசி வந்த நிலையில், நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய அம்மா ஷோபாவுக்கு மகன் விஜய் வாழ்த்து சொன்னாரா இல்லையா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil