நிவாரண பொருட்களிலும் விவசாயிகள் பற்றி யோசித்த மக்கள் செல்வன்

கஜ புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் வரையிலான நிவாரண பொருட்களை அளித்து உதவினார் நடிகர் விஜய் சேதுபதி.

கஜ புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அந்த குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில், உடனடியாக தேவைப்படும் அத்தியாவசிய நிவாரண பொருட்களை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வழங்கினார்.

நடிகர் விஜய் சேதுபதி நிவாரண உதவி

இது தொடர்பாக பேசிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, “கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி முழுமையாக திரும்ப 10 நாட்கள் ஆகும் என்பதால், உனடியாக தேவைப்படும் டார்ச் லைட் ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாகமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமை கொடுத்து பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகள் புரணமைத்து தரப்படும்.

மேலும், அவர்கள் தங்கள் பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை, மீண்டும் புதிதாக நட்டு வைக்கப்படும். இதற்கான களப்பணிகளில் என்னுடைய ரசிகர்களும் ஈடுபடுவார்கள். நிவாரண நிதி தேவைப்படுபவர்களை ரசிகர் மன்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும்” என தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close