Advertisment

அமெரிக்காவில் வெளியான விஜய் வீடியோ: ரசிகர்கள் பெருமிதம்

அமெரிக்காவில் டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டில் நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
விஜய்

விஜய்

அமெரிக்காவில் டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டில் நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் விஜய் தனது 49 பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் எல்லா வருடத்தைப் போலவும், இந்த வருடமும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து விஜய் பரிசு வழங்கினார். மேலும் இந்த விழாவில் நந்தினிக்கு வைர நெக்லஸ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அம்பேத்கர், பெரியாரை படிக்க வேண்டும் என்று விஜய் பேசியது மீண்டும் சர்ச்சையானது. அவர் அரசியலுக்கு வருவாரா என்ற விவாதத்தை அது எழுப்பியது. இந்நிலையில் அவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக, நியூயார்க்கில், டைம்ஸ் ஸ்கொயர் பில் போர்டில், விஜய்யின் பிறந்த நாள் வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் இங்கே  சில நடிகர்களின் படங்கள் மட்டுமே இதற்கு முன்பு ஒளிபரப்பப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் ஆர். மாதவன் வீடியோக்களும் இதற்கு முன்பாக ஒளிபரப்பப்படுள்ளது.

தற்போது விஜய் நடித்து முடித்த லியோ திரைப்படம், அக்டோபர் 19 தேதி வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil   

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment