Advertisment

கடைசி வரை விடாத கை... சங்கீதா விஜய் - ஆர்த்தி இடையே இப்படி ஒரு நட்பா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெசளியான மாவீரன் படத்தை பார்க்க விஜய் மனைவி சங்கீதா சென்னை வெற்றி திரையரங்கிற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது

author-image
WebDesk
Jul 14, 2023 22:44 IST
New Update
Sangeetha

VIjay Wife Sangeetha

சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் தனது கணவரின் படத்தை கூட தியேட்டரில் பார்க்க வராத விஜய் மனைவி சங்கீதா மாவீரன் படத்தை தியேட்டரில் பார்க்க வந்தது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்து தளபதி 68 படததிற்காக வெங்கட் பிரபுவுடன் இணைய தயாராகி வருகிறார். இதனிடையே அரசியல் தொடர்பான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே சமீப காலமாக விஜய் தனது மனைவியுடன் வெளியிடங்களுக்கு செல்வதில்லை.

இதனால் இருவரும் பிரிந்துவிட்டனர். விஜய் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போகிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் வெறும் வதந்தி என்று மறுத்த விஜய் தரப்பு சங்கீதா குழந்தைகளை பார்த்துக்கொண்டு வெளிநாட்டில் தங்கியுள்ளதாக தெரிவித்திருந்தனர். இதனிடையே விஜய் மனைவி சங்கீதா தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெசளியான மாவீரன் படத்தை பார்க்க விஜய் மனைவி சங்கீதா சென்னை வெற்றி திரையரங்கிற்கு வந்த வீடியோ தான் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் காரில் இருந்து இறங்கும் சங்கீதா மாஸ்க் அணிந்து கொண்டு தியேட்டர் உள்ளே செல்கிறார். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அடுத்து விஜய் இடத்தை பிடிக்கப்போவது இவர் தான் என்று கூறி வரும் நிலையில், விஜய் மனைவியே அவரின் படத்திற்கு வந்தது தற்போது பரபரப்பாக பேசப்ப்டு வருகிறது.

இதற்கு எதிராக ஒருபுறம் விஜய் ரசிகர்கள் மாவீரன் படம் குறித்து நெகடீவ் விமாசனங்களை கொடுத்து வரும் நிலையில், மறுபுறம் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தியேட்டரில் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தியை சந்தித்த சங்கீதா, அவரது கையை பிடித்துக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்துள்ளார். படம் குறித்து சிவகார்த்திகேயன் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment