"ஆளப் போறான் தமிழன்": நாளை வெளியாகிறது விஜய்யின் "மெர்சல்" பட முதல் பாடல்!

மெர்சல் படத்தின் முதல் பாடல் 'ஆளப் போறான் தமிழன்' நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் மெர்சல். மேலும், நித்யாமேனன், எஸ்.ஜே சூர்யா, சத்யராஜ், வடிவேலு என ஒரு பட்டாளமே நடித்துள்ளது. அனைவருக்கும் படத்தில் அழுத்தமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

கிராமத்து இளைஞர், மருத்துவர் மற்றும் மேஜிக் நிபுணர் என மூன்று வேடங்களில் விஜய் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் 20-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த படக்குழு தீர்மானித்துள்ளது.

இன்னும் விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்கள் மட்டுமே இப்படத்தின் ஷூட்டிங் மீதமுள்ளது என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரே ஒரு பாடல் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியதுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பாக, படத்தின் எடிட்டிங் பணிகளை முடித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் பின்னணி இசைக்கு அளிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், மெர்சல் படத்தில் முதலாவதாக ‘ஆளப் போறான் தமிழன்’ எனும் பாடலை நாளை (ஆகஸ்ட் 10) வெளியிட உள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

‘தல’ அஜித்தின் ‘விவேகம்’ பட பாடல்கள் முழுவதும் வெளியாகி மாஸ் ஹிட் அடித்துள்ள நிலையில், ‘தளபதி’ விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது விஜய் ரசிகர்களை ஏக குஷியில் ஆழ்த்தியுள்ளது.

அஜித் படத்திற்கு அனிருத் இசை… விஜய் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை..! ஆஹா! இதுவல்லவா நிஜப் போட்டி!.

×Close
×Close