முதன்முறையாக கமலுடன் இணைந்த 'சீயான்' விக்ரம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்

கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் தூங்காவனம், மன்மதன் அம்பு ஆகிய படங்களை இயக்கியவர் ராஜேஷ் எம்.செல்வா. இவர் கமல்ஹாசனின் அசோசியேட் ஆவார். இந்த நிலையில், இவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தை, கமல்ஹாசனின் படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது. கமலின் மகள் அக்ஷராஹாசனும் இதில் நடிக்கிறார். ஆனால், அவர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது உறுதியாகவில்லை. படத்தின் பெயர், கதாநாயகி விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

×Close
×Close