/indian-express-tamil/media/media_files/2025/10/10/vineeth-shobana-2025-10-10-16-25-28.jpg)
நடிகர் வினீத் - நடிகை ஷோபனா
தமிழ் சினிமாவில் காதல் நாயகனாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் வினித், பழம்பெரும் நடிகையின் மருமகன் முறை ஆவார். அதே சமயம் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை ஒருவரின் நெருங்கிய உறவினர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
சினிமா உலகில், ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான ஆர்வம் இருக்கும். ஹீரோ, ஹீரோயின்கள், திரைப் படங்களில் தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவதுடன், கணிசமான புகழையும் ஈட்டுகின்றனர். இதன் மூலம் அவர்களின் குடும்பமும் வெளிச்சத்திலேயே இருக்கின்றனர். அதேபோல், புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர் வினீத்தின் நெருங்கிய உறவினர் (கசின்) ஒரு முன்னணி தென்னிந்திய நடிகையாக இருக்கிறார்.
ஆவாரம்பூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வினீத். அதன்பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், நடிப்பில் வெளியான மே மாதம், காதல் தேசம், சிம்மராசி, சந்திரமுகி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த வினீத், சக்தி என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இன்றும் ரசிகர்களின் அபிமான நாயகனாகத் திகழ்கிறார். அவரது பெயரைக் கேட்டாலே 90களின் இளைஞர்களுக்கு ஒரு தனி உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
பிரேம தேசம்" படத்திற்குப் பிறகும், வினீத் பல படங்களில் நடித்து மக்களின் மனதைக் கவர்ந்தார். அடுத்தடுத்துப் பல படங்களில் நடித்ததன் மூலம், அவர் திரையுலகில் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக மாறினார். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து, சிவாஜி கணேசனுடன் 60-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பத்மினியின் மருமகன் ஆவார். அதேபோல், நடிகை ஷோபானாவின் நெருங்கிய உறவினர் வினீத் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
90-களில் ஷோபனாவின் பெயர் ஒரு பரபரப்பான செய்தியாக இருந்தது. உண்மையில், அவர் திரையில் தோன்றினால், திரையரங்கமே விசில் சத்தத்தாலும் ஆரவாரத்தாலும் அதிரும். அந்தக் காலத்தில், ஷோபனாவின் படம் ஒரு போஸ்டரில் இருந்தால், அந்த படத்தின் ஹீரோவை பற்றி கூட கவலைப்படாமல் பல ரசிகர்கள் திரையரங்கை நோக்கிப் படையெடுப்பார்கள். அக்காலத்தில் பல நடிகர்கள், தங்கள் படங்களில் ஷோபனாவை கதாநாயகியாக நடிக்க வைப்பது ஒரு சிறந்த யோசனை என்று நினைத்தார்கள்.
ஷோபனா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக மட்டுமல்லாமல், ஒரு குணச்சித்திர நடிகையாகவும், நடனக் கலைஞராகவும் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்துப் பன்முகத்தன்மை கொண்ட நடிகையாகவும் அவர் அங்கீகாரம் பெற்றார்.
ஷோபனா 1982-இல் 'பக்த துருவ மார்க்கண்டேயா' என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதற்கு முன்பே 1980-ம் ஆண்டு மங்கள நாயகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதன்பிறகு எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, ரஜினியுடன், சிவா, தளபதி, துறைமுகம், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். 1996-ம் ஆண்டு, வெளியான துறைமுகம் படம் வெளியான பிறகு, 16 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.
வினீத் - ஷோபனா இருவரும் 1994-ம் ஆண்டு வெளியான மனதே வெள்ளித்திரு என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். ஒப்பிட முடியாத அழகுடன், நடிப்பு மற்றும் நடனத்தில் தனது பன்முகத்தன்மையினாலும் ஷோபனா இத்துறையில் மிகுந்த புகழைப் பெற்றார். சமீபத்தில் வெளியான 'கல்கி 2898 AD' திரைப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து மரியம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரூ1,200 கோடிக்கு மேல் வசூல் செய்து ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. திரையுலகில் ஒரு நட்சத்திரக் குடும்பமாகத் திகழும் வினீத் மற்றும் ஷோபனா, இருவருமே பரதநாட்டிய கலைஞர்கள், இவர்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.