தெரியுமா? நடிகர் விஷால் இந்த பெண்ணை தான் திருமணம் செய்யப் போகிறார்

விஷால் கல்யாண செய்தியால் கோலிவுட் உலகமே களைக்கட்டியுள்ளது.

நடிகர் விஷால் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கோலிவுட் உலகமே களைக்கட்டியுள்ளது.

நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னர் தான் தனது திருமணம் என விஷால் சபதம் செய்தார். நடிகர் சங்க கட்டிடம் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரெடியாகிவிடும் என்ற நிலையில் உள்ளதால், விஷாலின் பெற்றோர் அவரது திருமணத்திற்காக பெண் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

நடிகர் விஷால் திருமணம்

நடிகை வரலட்சுமியை விஷால் காதலித்து வருவதாகவும், அவரைத் தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் பல செய்திகள் உலாவின. ஆனால், அதனை வரலட்சுமி தரப்பு தொடர்ந்து மறுத்து வந்தது. ஆனால், விஷாலோ லட்சுமிகரமான பெண்ணை திருமணம் செய்வேன் என சின்ன ஹிண்ட் கொடுக்க, அந்த செய்தி மேலும் பரவ ஆரம்பித்தன.

இந்நிலையில், தற்போது விஷாலுக்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், ஐதராபாத்தில் தை மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும் சில வட்டாரங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close