நடிகர் விஷால் தங்கை திருமணம் : குஷ்பூ, கார்த்தி வாழ்த்து - படங்கள்

நடிகர் விஷால் தங்கையின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. குஷ்பு, கார்த்தி உள்ளிட்ட சினிமா வி.ஐ.பி.க்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் விஷால் தங்கையின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. வி.ஐ.பி.க்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க பொது செயலாளர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி க்ரிதிஷ் ஆகியோரின் திருமணம் ஆகஸ்ட் 27-ம் தேதி (ஞாயிறு) நடைபெற்றது. சென்னையில் மேயர் ராமநாதன் சென்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகனும் , மணமகளும் தங்க நிறத்தில் உடையணிந்து இருந்தனர்.

actor vishal, vishal's sister marriage, kushbhu, actor karthi

மண மேடையில் மணமக்கள்

காலை 1௦.1௦ மணி அளவில் சுப முகூர்த்த நேரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகன், மணமகளுக்கு தாலி கட்டினார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் சங்க கௌரவ செயலாளர்கள் கதிரேசன் மற்றும் ஞானவேல் ராஜா , நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் – சரண்யா பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி – ரஞ்சினி கார்த்தி, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி,

actor vishal, vishal's sister marriage, kushbhu, actor karthi

குஷ்பு – சுந்தர்.சி வாழ்த்து

தயாரிப்பாளர் சத்ய ஜோதி G.தியாகராஜன் – செல்வி தியாகராஜன், லட்சுமி புரொடக்ஷன் ராமராவ், அழகப்பன் ராக்லைன் வெங்கடேஷ், ரவி பிரசாத், சுஹாசினி மணிரத்தினம், சுந்தர்.சி – குஷ்பூ சுந்தர், ஹான்ஸ் ராஜ் சாக்ஸ்சேனா, சிநேகா பிரிட்டோ, நடிகர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, அர்ஜுன் மனைவி ஆஷா ராணி அர்ஜுன், பாண்டிய ராஜன், ப்ரிதிவி ராஜன், ஆர்யா, ஜீவன், வினய், குட்டிபத்மினி, ஸ்ரீமன் மற்றும் குடும்பத்தினர், பசுபதி மற்றும் குடும்பத்தினர், ரமணா, உதயா, நந்தா, சிபி ராஜ், சங்கீதா கிருஷ், லலிதா குமாரி, விக்ராந்த் – மானசா விக்ராந்த்,

actor vishal, vishal's sister marriage, kushbhu, actor karthi

நடிகர் கார்த்தி குடும்பத்தினர் வாழ்த்து

நிழல்கள் ரவி, சின்னிஜெயந்த், ஜெகன், ப்ளாக் பாண்டி, ஹேமச்சந்திரன் குடும்பத்தினர், ஜே.பி, ஜான் விஜய், குருஜி, சஞ்சய் பாரதி, ஆதவ் கண்ணதாசன், சௌந்தர்ராஜ், அப்சல், இயக்குநர் P.வாசு, மனோபாலா, மிஷ்கின் குடும்பத்தினர், விஷ்ணுவர்தன் – அனுவர்தன், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி , திரு , நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா , காஸ்டியும் டிசைனர் சத்யா , ஒளிப்பதிவாளர் சங்க துணை தலைவர் ப்ரியன் , கலை இயக்குநர் உமேஷ் மற்றும் குடும்பத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அனைவரையும் விஷால் வரவேற்றார். விழாவின் புகைப்படங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close