குஜராத்தில் நடந்த சம்பவம்… இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ் பட நடிகை!

தெலுங்கில், அ.ஆ, மற்றும் பிரேமம் ஆகிய படங்களில் நடித்த அனுபாமா, தமிழில் கொடி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

குஜராத்தில் நடந்த சம்பவம்… இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ் பட நடிகை!

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விரக்தி காரணமாக தான் அப்போது நடந்துகொண்ட விதம் குறித்து படத்தின் வெற்றி விழாவில் இயக்குநரிடம் நடிகை அனுபாமா பரமேஸ்வரன் மன்னிப்பு கோரியுள்ளார்.

மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் அனுபாமா பரமேஸ்வரன். தொடர்ந்து தெலுங்கில், அ.ஆ, மற்றும் பிரேமம் ஆகிய படங்களில் நடித்த இவர், தமிழில் கொடி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்த அனுபாமா, அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் இவர், 18 பேஜஸ், பட்டர்ஃபிளை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்த கார்த்திகேயா 2 படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் வெற்றி விழாவில், பங்கேற்ற அனுபாமா பரமேஸ்வரன் படத்தின் இயக்குநர், சண்டோ மேன்டிடியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், இந்த படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடந்தபோது, எனக்கு காயம் ஏற்பட்டது. அப்போது கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டேன். ஆனால் கடைசி நாளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் நான்  விரக்தியடைந்தேன்.

அதற்காக இயக்குநரிடம் இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் வாழக்கையில் செய்த மிகபெரிய தவறு இதுதான். இந்த படத்தில் சிறந்த கேரக்டரை கொடுத்த இயக்குநருக்கு மிகவும் நன்றி என்று பேசியுள்ளார். படத்தின் வெற்றிவிழாவில் நடிகை இயக்குநரிடம் மன்னிப்பு கேட்டது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress anupama parameswaran say sorry to karthikeya 2 director