Advertisment

சிரிப்புதான் சிக்கலே… புதுவித நோயால் பாதிக்கப்பட்ட நடிகை அனுஷ்கா ஷெட்டி

சமீபகாலங்களாக சினிமா நடிகைகள் அரியவகை நோய்களால் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகியுள்ளது. நடிகை அனுஷ்கா தான் ஒரு புதுவிதமான நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருப்பது ரசிகர்கள் இடையே கவலையை ஏறடுத்தியுள்ளது.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிரிப்புதான் சிக்கலே… புதுவித நோயால் பாதிக்கப்பட்ட நடிகை அனுஷ்கா ஷெட்டி

சமீபகாலங்களாக சினிமா நடிகைகள் அரியவகை நோய்களால் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகியுள்ளது. நடிகை அனுஷ்கா தான் ஒரு புதுவிதமான நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருப்பது ரசிகர்கள் இடையே கவலையை ஏறடுத்தியுள்ளது.

Advertisment

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை சார்ந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். நடிகை மம்தா மோகன் தாஸ் நிறம் மாறும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சி பெற்று வருகிறார். தசைக்கூட்டு வலியுடன் நினைவாற்றல் மற்றும் மனநிலை மாற்றம் தொடர்பான ஃபைப்ரோ மயால்ஜியா வகை நோயினால் நடிகை பூனம் கவுர் பாதிக்கப்பட்டு சிரமப்படுகிறார். நடிகை சுருதிஹாசன் தான் கருப்பை சம்பந்தப்பட்ட பி.சி.ஓ.எஸ் வகை நோயினால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த வரிசையில், இப்போது நடிகை அனுஷ்காவும் ஒரு புதுவிதமான நோயுடன் வரிசையில் சேர்ந்திருக்கிறார். நடிகை அனுஷ்கா ஷெட்டியும், தனக்கு வந்திருக்கும் பிரச்சினை சிரிப்பு தான்.. என்று கூறியுள்ளார். சிலர் சிரித்தால் என்ன பிரச்னை என்று கெள்வி எழுப்பலாம். ஒரு நகைச்சுவை ஜோக் கேட்டால் சிரித்து விட்டு உடனே வேலையை பார்க்க சென்றால் பரவாயில்லை.. ஆனால், விடாமல் 20 நிமிடம் சிரிக்கிற நோய்தான் அனுஷ்கா பாதித்து இருக்கிறது.

கர்நாடகாவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அனுஷ்கா, தனக்கு சிரிக்கும் நோய் உள்ளதாகவும், தான் சிரிக்க ஆரம்பித்தால் அதை நிறுத்த குறைந்தது 10 முதல் 20 நிமிடங்கள் ஆகும் எனவும் தெரிவித்திருந்தார்.

இது சில சமயம் படப்பிடிப்பை கூட நிறுத்தும் அளவுக்கு கூட சென்று விடும் என அனுஷ்கா கூறிய நிலையில், ஆரம்பத்தில் இதனை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை…. ஆனால் ஒரு கட்டத்தில் இதன் தாக்கம் அனுஷ்காவை துரத்திய போது தான் விபரீதமும் தெரியவந்திருக்கிறது.

இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது தான் இது ஒரு அரிய வகை நோய் என்பது தெரியவந்துள்ளது. மூளையின் நரம்பில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் ஏற்படும் இந்த அரிய வகை நோய் அலர்ஜி, வீக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. இதனால், பெரிதும் பாதிப்பில்லை என்றாலும், இந்த நோய் நூற்றில் ஒருவருக்கு கடந்த கால நினைவுகளை இழக்கச் செய்யும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Anushka Shetty
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment