scorecardresearch

தூம் பாடலுடன் இ-ஸ்கூட்டர் பயணம் : ஹன்சிகா – சோஹைல் வீடியோ வைரல்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஹன்சிகா டிசம்பர் மாத தொடக்கத்தில் தொழில் அதிபரும் தனது பிஸினஸ் பாட்னருமான சோஹைல் கதூரியாவை திருமணம் செய்துகொண்டார்.

தூம் பாடலுடன் இ-ஸ்கூட்டர் பயணம் : ஹன்சிகா – சோஹைல் வீடியோ வைரல்

சமீபத்தில் தொழில் அதிபரும் தனது பிஸினஸ் பாட்னருமான சோஹைல் கதூரியாவை திருமணம் செய்துகொண்ட நடிகை ஹன்சிகா ஐரோப்பாவில் தனது தேனிலவை கொண்டாடி வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஹன்சிகா டிசம்பர் மாத தொடக்கத்தில் தொழில் அதிபரும் தனது பிஸினஸ் பாட்னருமான சோஹைல் கதூரியாவை திருமணம் செய்துகொண்டார். ராஜஸ்மான் மாநிலத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோட்டையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் முக்கிய நண்பர்கள் கலந்துகொணடனர்.

திருமணம் முடிந்த ஹன்சிகா தனது கணவருடன் ஐரோப்பாவிற்கு தேனிலவு சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஆஸ்திரியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது ஹன்சிகா எடுத்தக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில், ஹன்சிகா மோத்வானி தற்போது ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டில் இருந்து ஒரு வீடியோவைப் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஹன்சிகா தனது ஸ்கூட்டர் ஓட்டும் திறமையை வெளிப்படுத்தியள்ளார். மின்-ஸ்கூட்டர் ஓட்டும் இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹன்சிகா பிரவுன் ஓவர் கோட், நீல நிற டெனிம்ஸ், கருப்பு பூட்ஸ் மற்றும் டார்க் சன்கிளாஸ்களில் வருகிறார்.

மேலும் இவர் இ-ஸ்கூட்டரை ஓட்டும்போது, அபிஷேக் பச்சன் நடித்த தூம் படத்தின் தலைப்பு பாடல் ஒலிக்கிறது. ஹன்சிகா தனது ஸ்கூட்டர் பயணத்தின் போது சிரித்துக்கொண்டே கேமராவை பார்த்துக் கொண்டிருந்தார். டானூப் நதியின் காட்சிகளில் திளைக்க  ஹங்கேரியின் குறிப்பிடத்தக்க அடையாளமான ஹங்கேரிய தேசிய சட்டமன்றம் மற்றும் புடாபெஸ்டில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமும் வீடியோவில் காணப்பட்டது.

இது மட்டுமல்லாமல் ஹன்சிகா வெளியில் இருந்து சில தனி புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். சமீபத்தில், ஹன்சிகா வியன்னாவில் சோஹைலுடன் தனது கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress hansika motwani e scooter rides in europe honeymoon trips

Best of Express