அய்யோ வாய கிளறாதீங்களேன்!! விவேகம் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்

சினிமாவில், நடிகைகளிடம் அட்ஜஸ்மென்ட் கலாசாரம் இருப்பதாக நடிகை கஸ்தூரி கூறியதாக ஒரு செய்தி அண்மையில் வைரல் ஆனது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
நடிகை கஸ்தூரி, Actress kasthuri, vivegam movie

விவேகம் திரைப்படம் குறித்து "அய்யோ வாய கிளறாதீங்களேன்" என நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக அரசியல் வீசி வரும் புயலின் தாக்கம் திரைத்துறையையும் விட்டு வைக்கவில்லை. ரஜினி, கமல் தொடங்கி, பாடகி சுசித்ராவின் சுசி லீக்ஸ், நடிகை கஸ்தூரி என நீண்டு கொண்டே இருக்கிறது. சினிமாவில், நடிகைகளிடம் அட்ஜஸ்மென்ட் கலாசாரம் இருப்பதாக நடிகை கஸ்தூரி கூறியதாக ஒரு செய்தி அண்மையில் வைரல் ஆனது.

தான் சார்ந்திருக்கும் திரைத்துறை மட்டுமல்லாமல் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்தும், சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தனது கருத்தை நடிகை கஸ்தூரி சமீப காலமாக தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இதனிடையே, சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் "விவேகம்" திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த 24-ம் தேதி வெளியானது. இப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. மேலும், சில விமர்சகர்கள் படக்குழுவை கடுமையாக சாடியும் இருந்தார்கள். ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில், நடிகை கஸ்தூரியிடம் விவேகம் பார்த்தாச்சா மேடம்? உங்களது அனுபவம் எப்படி இருந்தது? என ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள நடிகை கஸ்தூரி, "பார்த்தேன், பார்த்தேன், முதல் நாள் முதல் காட்சி" என பதிலளித்துள்ளார், மேலும், படம் பார்த்த அனுபவம் குறித்து பதிவிட்டுள்ள அவர், "அய்யோ வாய கிளறாதீங்களேன்!! நானே கம்முனு இருக்கேன்" என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட், விஜய்-அஜித் ரசிகர்கள் மற்றும் பலரின் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Vivegam Kasthuri

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: