திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது மூதாதையர்கள் வாழ்ந்த வீடு, அருகில் உள்ள கோவில் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தார்.
Advertisment
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்துவருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து ரிங் மாஸ்டர், இது என்ன மாயம், நேனு ஷைலஜா, ரஜினி முருகன், ரெமோ, பைரவா, நேனு லோக்கல், தானா சேர்ந்த கூட்டம், மகாநடி, சர்கார், அண்ணாத்த, சர்காரு வாரி பட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சென்னையில் படித்து வளர்ந்தாலும் இவரின் பூர்விகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் திருக்குறுங்குடி ஆகும். இந்தப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், தனது மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் பூர்விக வீடு
தொடர்ந்து அருகில் உள்ள பழம்பெருமை வாய்ந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இந்தப் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil