Advertisment
Presenting Partner
Desktop GIF

அரசியல்வாதி மாப்பிள்ளை... கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா கல்யாண வதந்திகளில் எது நிஜம்?

தென்னிந்திய அரசியல் பின்புலம் கொண்ட தொழிலதிபர் ஒருவரை கீர்த்தி சுரேஷ் மணக்கவிருப்பதாகவும், இதற்கு கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Hanshika

ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் திருமண வதந்தி

நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா ஆகியோரின் கல்யாண சாப்பாடு குறித்த வதந்திகள் மீண்டும் கோடம்பாக்கத்தை சுற்றிவருகின்றன. இம்முறை இந்த வதந்திகள் சற்று சப்தமாக கேட்கின்றன.

Advertisment

தென்னிந்திய அரசியல் பின்புலம் கொண்ட தொழிலதிபர் ஒருவரை கீர்த்தி சுரேஷ் மணக்கவிருப்பதாகவும், இதற்கு கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரஜினியுடன் 'அண்ணாத்த', 'சாணிக் காயிதம்', தெலுங்கில் மகேஷ் பாபுடன் 'சர்காரு வாரி பட்டா', 'குட்லக் சகி', மலையாளத்தில் மோகன்லாலுடன் 'மரக்காயர் தி அரபிக்கடலிண்டே சிங்கம்' உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருந்தன.

இவருக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று அவ்வப்போது வதந்திகள் பரவுவது வழக்கமாகிவிட்டது. அதற்கு உடனடியாக அவருடைய தரப்பிலிருந்து மறுப்பும் தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் கீர்த்தி சுரேஷ் திருமண வதந்தி பரவி வருகிறது.
முன்னதாக சென்னையைச் சேர்ந்த முன்னணித் தொழிலதிபர் ஒருவருடன் கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் பரவியது.

இதேபோல் நடிகை ஹன்சிகா மீதும் அவ்வப்போது திருமண வதந்திகள் வருவதுண்டு. அண்மையில் அவரும் தொழிலதிபர் ஒருவரை விரைவில் மணக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதனை ஹன்சிகா தரப்பு மறுத்துவிட்டது நினைவு கூரத்தக்கது.

நடிகை அனுஷ்கா, திரிஷா, கீர்த்தி சுரேஷ், தமன்னா, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட டாப் ஹீரோயின்கள் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், அவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Keerthy Suresh Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment