scorecardresearch

இவ்வளவு உக்கிரமா நான் ஆடியதே இல்லை: தமிழ்பட டான்ஸை நினைவு கூர்ந்த பாலிவுட் நடிகை

Tamil Cinema Update : எனது 1000 வது பதிவை சிறந்த பதிவாக உருவாக்க நினைத்தேன். வாழ்நாள் முழுவதும், எனது முதல் படமான அரசாட்சி மறக்க முடியாது

பிரபல பாலிவுட் நடிகையாக லாரா தத்தா தனது புதிய தமிழ் படத்தை பாடலை வெளியிட்டு தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

கடந்த 2003-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஆண்டாஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் லாரா தத்தா. தொடர்ந்து ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த இவர், 2004-ம் வெளியான அரசாட்சி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். லாரா என்ற கேரக்டரில் நடித்த இவர். வெளிநாட்டில் படித்துவிட்டு திரும்பும் இந்திய பெண்ணாக நடித்திருந்தார்.

இந்திய திரும்பிய லாரா தனது தந்தையில் ஹோட்டல் தொழிலை அவரது நம்பிக்கைக்கு உரிய சித்தார்த்தின் (அர்ஜூன்) மூலம் பயிற்சி பெற்று கையில் எடுத்துக்கொள்கிறார். இந்த பயிற்சியின்போது சித்தார்த்துக்கும் லாராவுக்கும் இடையே காதல் மலர்கிறது. என்.மகாராஜன் இயக்கிய இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதன்பிறகு தமிழில் நடிக்காத லாரா தத்தா சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு வெளியான டேவிட் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள லாரா சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1000 போஸ்ட் என்ற மைல்கல்லை எட்டியுள்ள அவர் தனது ஆயிரமாவாது போஸ்டாக அரசாட்சி படத்தில் அர்ஜூனுடன் நடனமாடும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த பதிவில் நடிகர் அர்ஜூன் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரை குறிப்பிட்டுள்ள அவர். எனது 1000 வது பதிவை சிறந்த பதிவாக உருவாக்க நினைத்தேன்.  வாழ்நாள் முழுவதும், எனது முதல் படமான அரசாட்சியில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜின் சிறந்த இசையில் அர்ஜுன் என்னுடன் நடித்தார் இந்த படம் மறக்க முடியாது.  நான் என் வாழ்நாளில் இவ்வளவு விறுவிறுப்பாக நடனமாடியதில்லை. இதை நான் அதை விரும்புகிறேன்!!! என்று குறிப்பிட்டுள்ளார்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress lara dutta instagram milestone throwback to her first tamil film