/tamil-ie/media/media_files/uploads/2022/04/Nalini.jpg)
80களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நளினி. தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர் தான் முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அருண் அருணா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
1987-ம் ஆண்டு நடந்த இந்த திருமணம் 2000-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. தற்போது படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வரும் நளினி, இவ்வப்போது தனியார் செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நக்கீரன் தளத்தில் அவர் அளித்த பேட்டியில் ஜெயலலிதா ஒரு விஷயத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என்பதால் ஒரு மாதம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறியுள்ளர்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
ஜெயலலிதா அம்மா எனக்கு ரொம்ப நெருக்கும். என்னிடம் குழந்தை மாதிரி பழகுவார். என்னுடைய குழந்தைகளுக்கு புத்தகம் பிடிக்ம் என்பதால் வரும்போது நிறைய புத்தகங்களை வாங்கி வருவார். அவரை வெளியில் இருந்து வேறு ஆளாகவும், அருகில் இருந்து குழந்தையாகவும் ரசித்திருக்கிறேன்.
டிசம்பர் 6-ந் தேதி போயஸ் கார்டனில் இருந்து எனக்கு ஒரு போன்கால் வந்ததை என்னால் மறக்க முடியாது. அதில் உடனே கிளம்பி வீட்டுக்கு வாருங்கள் என்று சொன்னார். அப்போது எனது கணவர் வீட்டில் இல்லை. நான் அவரிடம் சொல்லிவிட்டு, ஜெயலலிதா அம்மாவுக்கு பிடித்த ஸ்வீட்டை வாங்கிக்கொண்டு சென்றோம்.
போயஸ் கார்டனை சுற்றி பார்க்க வேண்டும் என்று கூறி என் கணவரின் தாய் மாமா எங்களுடன் வந்தார். அப்போது எங்களுக்கு நிறைய பொருளார நெருக்கடி இருந்தது. அதனால் எங்களுக்கு பண உதவி செய்ய முடியுமா என்று பலமுறை கேட்டிருப்போம் அதற்காகத்தான் அழைத்திருக்கிறாரா என்று யோசித்தோம்.
உள்ளே சென்றதும் அவரிடம் ஸ்வீட்டை கொடுத்தோம். நீ எனக்கு ஷ்வீட் கொடுக்கிறாயா நானும் உனக்கு ஸ்வீட்டான செய்தி சொல்லப்போகிறேன் என்று கூறினார். ஒருவேளை கடனை அடைக்கப்போறேன் என்று சொல்லப்போகிறாரா என்று யோசித்துக்கொண்டிருந்தோம். அப்போது உங்கள் வீட்டுக்காரரை திருச்செந்தூர் தொகுதி எம்பி ஆக்க போகிறேன் என்று சொன்னார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
என்னம்மா சொல்றீங்க என்று கேட்டோம். அதற்கு நான் முடிவு செய்துவிட்டேன். நீங்கள் தான் திருச்செந்தூர் எம்பி என்று சொன்னார். எங்களுக்கு கண் கலங்கிவிட்டது. இந்த விஷயத்தை அடுத்த மாதம் அறிவிப்பேன் அதுவரை யாரிடமும் சொல்லக்கூடாது யாருக்காவது தெரிந்தால் சீட் தரமாட்டேன் என்று சொன்னார்.
சந்தோஷத்தில் எங்கள் முகமெல்லாம் மாறிவிட்டது. உள்ளே என்ன பேசினீர்கள் என்று என் கணவரின் தாய் மாமா கேட்க ஒன்றும் இல்லை என்று சொல்லி சமாளித்தோம். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக ஒரு மாதம் வீட்டை விட்டு வெளியே போகவே இல்லை. தேர்தல் நேரத்தில் பணம் போதவில்லை என்று சொன்னால் நீ ஏன் கவலைப்படுகிறாய் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி எம்பிஆக ஜெயிக்க வைத்து அழகு பார்த்தார்.
அவர் எங்களுக்கு வாழ்க்கை கொடுத்தார் என்றே சொல்லாம். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நான் விஜயசாந்தி அவரது பிஏ மூவரும் விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று செய்தி வந்தது. நான்விமானத்திலேயே தலை சுற்றி உட்கார்ந்துவிட்டேன். பின்னர் அது பொய் செய்தி என்று தெரியவந்தது. அடுத்த சில நாட்களில் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்தபோது அவர் இறந்த செய்தி வந்தது.
ஒருநாள் முழுவதும் அப்செட்டாகவே இருந்தேன். அவர் இறந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவர் என்னோடு இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.