பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மேல் ராய் லஷ்மி கோவப்பட்டதுக்கு இது தான் காரணம்!!!

தமிழ் சின்னதிரை நிகழ்ச்சியில் பெரிய அளவுக்குப் புகழ் பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். சினிமா துறையில் பல பிரபலங்களை போட்டியாளர்களாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

சமீப காலமாகவே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியில் சில பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர் என்ற பெயர் பட்டியல் வெளியாகி வருகிறது. தமிழ் சினிமாக்களில் பல திரைப்படங்களில் நடித்தவர் ராய் லஷ்மி. தல அஜித் நடித்த மங்காத்தா படத்தின் மூலம் பல இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தவர் இவர். கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இவர் பங்கேற்க உள்ளார் என்ற தகவல்கள் பரவி வந்தது. இந்தத் தகவலை சிலர் உறுதி செய்தும், சிலர் மறுத்தும் வந்தனர். இதற்கான தெளிவான பதிலை ராய் லஷ்மியே கூறியுள்ளார்.

இதில் “பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நான் நிச்சயம் கலந்துகொள்ளவில்லை. இதைப் பல முறை கூறிவிட்டேன். ஒரே கேள்விக்கு எவ்வளவு முறை பதில் கூற வேண்டும்.” என்று கோபமடைந்துள்ளார். இந்தப் பதிவின் மூலம், பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் ராய் லஷ்மி குறித்து வந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் 2 வது சீசன் இந்த மாதம் 17ம் தேதி துவங்க உள்ள நிலையில், இதில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்களின் தேர்வு மும்புரமாக நடைபெற்று வருகின்றது. பிக் பாஸ் 2-விற்கான பிரமோக்களையும் நிகழ்ச்சியின் குழுவினர் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். இதுவரை பிக் பாஸ் 2-வின் இரண்டு டீசர்களும், 5 பிரமோக்களும் வெளியிடப்பட்டுள்ளது. 15 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close