கொரோனா வைரஸ் பரவலால் ஐரோப்பிய நாடுகள் பூட்டப்பட்டுள்ள நிலையில், லண்டன் சென்ற நடிகை ராதிகா ஆப்தேவுக்கு அவரது நண்பர்கள், நலம் விரும்பிகள் அக்கறையுடன் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆண்டு முழுவதும் இந்தியாவுக்கும் லண்டனுக்கும் சத்தமில்லாமல் அடிக்கடி விமானத்தில் பறந்துகொண்டிருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. இந்த நிலையில், நடிகை ராதிகா ஆப்தே, பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு விமானம் மூலம் சென்றார். இது குறித்து அறிந்த ராதிகா ஆப்தேவின் நண்பர்கள், நலம் விரும்பிகள் என அனைவரும் அக்கறையுடன் கவலை தெரிவித்து மெசேஜ் அனுப்பியுள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா ஆப்தே இந்தி, தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முக்கியமான நடிகையாக உள்ளார். இவர் தமிழில் ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றி செல்வன், மற்றும் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாலிவுட்டில் பிஸியாக உள்ள ராதிகா ஆப்தே, ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.
அண்மையில், உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவிவருவதால், வைரஸ் பரவலைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பூட்டியுள்ளது.
இந்த நிலையில், நடிகை ராதிகா ஆப்தே பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு திரும்பியுள்ளார். இது போன்ற ஆபத்தான சூழலில் ராதிகா ஆப்தே லண்டனுக்கு சென்றதை அறிந்த அவரது நண்பர்கள், நலம் விரும்பிகள், சினிமா நண்பர்கள் என பலரும் அக்கறையுடன் கவலை தெரிவித்து மெசேஜ் அனுப்பியது குறித்து வர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தி சேக்ரட் கேம் படத்தில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் குடியேற்ற அலுவலகம் சென்ற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து அக்கறையுடனும் ஆர்வத்துடனும் எனக்கு பல செய்திகள் வந்துள்ளது. நான் பாதுகாப்பாக லண்டன் திரும்பி வந்துள்ளேன். இமிகிரேஷனில் எந்த பிரச்னையும் இல்லை. அது காலியாக இருந்தது. அவர்களுடன் அரட்டை அடித்தது ரொம்ப அற்புதமாக இருந்தது. ஹீத்ரோ எக்ஸ்பிரஸ் விமானம் உண்மையில் காலியாக இருந்தது. பாடிங்டனிலும் யாரும் இல்லை.” என்று ராதிகா ஆப்தே குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ராதிகா ஆப்தே தனது சினிமா பணி நிமித்தமாகவும் தனது கணவர் லண்டனைச் சேர்ந்த இசைக் கலைஞர் பெனடிக்ட் டெய்லரைச் சந்திக்க லண்டனுக்குச் செல்கிறார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு பதிவுகளாக குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் இந்தியாவிலிருந்து திரும்பி வந்த விமானம் பயணிகளால் நிரம்பியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். அதில், “பிஎஸ் - பிஏ விமானம் நிரம்பி இருந்தது. (இரண்டு நாட்களுக்கு முன்பு நான் லண்டனில் இந்தியாவுக்குச் சென்றபோது அது காலியாக இருந்தது.)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எல்லைகளை மூடுவதற்கான ஐரோப்பாவின் திட்டங்களைப் பற்றி ராதிகா ஆப்தே கூறுகையில், “பி.எஸ் - இமிகிரேஷன் அதிகாரிகளிடம் இங்கிலாந்து எல்லைகள் மூடுவது குறித்து எந்த தகவலும் இல்லை.” என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.