ரேவதி கால்ஷீட் 5 நாள் தான், மொத்த படமும் முடிஞ்சுது: 'ஆண்பாவம்' உருவான வரலாறு சொன்ன பாண்டியராஜன்!

படத்தில் ஹீரோயினாக நடித்த ரேவதியை புக்பண்ணும்போது அவருக்கு டேட்டே இல்லை. ஆனாலும் இருக்கிற டேட்டை கொடுங்கள் என்று சொன்னபோது அவர் 5 நாட்கள் கொடுத்தார்.

படத்தில் ஹீரோயினாக நடித்த ரேவதியை புக்பண்ணும்போது அவருக்கு டேட்டே இல்லை. ஆனாலும் இருக்கிற டேட்டை கொடுங்கள் என்று சொன்னபோது அவர் 5 நாட்கள் கொடுத்தார்.

author-image
D. Elayaraja
New Update
aanpavam

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்த நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் தமிழ் சினிமாவில், பல இயக்குனர்களை உருவாக்கியுள்ளார். அந்த வகையில் அவரிடம் பணியாற்றிய பாண்டியராஜன், தனது 2-வது படத்திற்கு, ரேவதியை வைத்து 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பை நடத்தி வெற்றிப்படமாக கொடுத்துள்ளார்.

Advertisment

இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவியாளராக இணைந்து பணியாற்றிய பாக்யராஜ் சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு, ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், இன்றுபோய் நாளை வா, அந்த 7 நாட்கள், பொய் சாட்சி, டார்லிங் டார்லிங், டார்லிங் என வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். இதில் மௌன கீதங்கள் படம் தொடங்கி டார்லிங் படம் வரை அவரிடம் உதவி மற்றும் இணை இயக்குனரான பணியாற்றியவர் தான் பாண்டியராஜன்.

தூரல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங், டார்லிங் ஆகிய படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார். 1983-ம் ஆண்டு, பாக்யராஜ் ஏ.வி.எம். நிறுவனத்திற்காக முந்தானை முடிச்சு படத்தை இயக்க இருந்த சமயத்தில் அவரிடம் உதவியாளராக இருந்த பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், ஜி.எம்.குமார் ஆகியோர் சொல்லாமல், அவரிடம் இருந்து விலகிவிட்டதாகவும், இதை உணர்த்த வேண்டும் என்பதற்காக, படத்தில் வரும் 3 சிறுவர்களின் கேரக்டரை பார்த்து உங்களை மாதிரி குரு துரோகிகளை நான் பார்த்ததே இல்லை என்று பாக்யராஜ் சொல்வார். 

இந்த படம் பெரிய வெற்றி பெற்ற நிலையில், பாண்டியராஜன், தனது ஆண்பாவம் படத்தில் நடந்த சுவாரஸ்யமாக சம்பவம் குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில், பேசியுள்ளார். படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. சும்மா ஒரு பிரேமில் வந்து போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் ஹீரோவாக ஆகவே இல்லை. ஆண்பாவம் படத்தில் கூட அந்த கேரக்டர் ஒரு துணை நடிகர் தான். பாண்டியன் அதில் ஹீரோவாக நடித்தார்.

Advertisment
Advertisements

படம் ரிலீஸ் ஆனபோது என்னை நாயகனாக மாற்றியது இளையராஜா இசையில் வந்த காதல் கசக்குதய்யா என்ற பாடல் தான். படத்தில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கும்போது, பாண்டியன் மூட்அவுட்டில் வரவில்லை. அதனால் நான் பல்டி சூப்பராக அடிக்கிறேன் என்று சொல்லி சுப்புராயன் மாஸ்டர் என்னையே நடிக்க சொன்னார். அப்போது படத்தில் பின்னணி இசையில் நான் பல்டி அடித்ததற்கு தனி மியூசிக் போட்டு என்னையே ஹீரோவாக மாற்றியவர் தான் இளையராஜா.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ரேவதியை புக்பண்ணும்போது அவருக்கு டேட்டே இல்லை. ஆனாலும் இருக்கிற டேட்டை கொடுங்கள் என்று சொன்னபோது அவர் 5 நாட்கள் கொடுத்தார். அந்த படத்தில் மொத்தமே 5 நாட்கள் தான் ரேவதி காட்சிகள் அனைத்தும் எடுத்து ஒன்றரை மணி நேரத்தில் அவரை டப்பிங் பேச வைத்தேன். படத்தில் அவர் வரும் பாதி காட்சிகள் ஊமையாக நடித்திருப்பார். ஆனால் படம் பார்க்க ஆர்வம் இல்லாத ரேவதி படத்தை பார்த்துவிட்டு உண்மையில் பிரமித்து போனார் என்று பாண்டியராஜன் கூறியுள்ளார்.

tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: