அடுக்கு மொழியில் டி.ராஜேந்தர் திட்டியதால் மேடையில் கண்ணீர் விட்ட தன்ஷிகா: வீடியோ இணைப்பு

ஹன்சிகாவை பத்தியே கவலை படாதவன் நான் தன்ஷிகாவை பத்தியா கவலை பட போறேன் என நடிகை தன்ஷிகாவை சரமாரியாக நடிகர் டி.ராஜேந்தர் விளாசினார்

அடுக்கு மொழியில் டி.ராஜேந்தர் திட்டியதால் மேடையில் கண்ணீர் விட்ட தன்ஷிகா: வீடியோ இணைப்பு

விழித்திரு திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை அடுக்கு மொழியில் திட்டியதால், மேடையிலேயே தன்ஷிகா அழுதுள்ளார்.

மீரா கதிரவன் இயக்கி தயாரித்துள்ள படம் விழித்திரு. இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரபு, தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட காலமாக யாரிப்பில் இருந்த இப்படம் பல தடைகளை தாண்டி வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய நடிகை தன்ஷிகா பேசும்போது டி.ராஜேந்தரின் பெயரை குறிப்பிடவில்லை. அதன் பின்னர், மற்ற அனைவரும் பேசிய பின் டி.ராஜேந்தர் இறுதியாக பேசிய டி.ஆர்., என்னை ஏன் லாஸ்ட்டா பேச சொன்னீங்க? நான் வேஸ்ட்? இல்ல நான் பெஸ்ட்.? இது எனக்கு நீங்க வைக்கிற டெஸ்ட்? என அவருக்கே உரிய பாணியில் அடுக்கு மொழியில் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், கபாலி எடிட்டர் பிரவீன் என்று சொன்னீர்கள். அவர் தானே கழுகு படத்தை எடிட்டிங் செய்தார். பெரிய படங்களை மட்டும்தான் சொல்வீர்களா? ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தார் தன்ஷிகா. அவருக்கு என்னை யார் என்று தெரியாதாம். மல. மல. அண்ணாமலை. அந்த மலை கூட நடிச்சிட்டா? தன்ஷிகாவிற்கு மேடை நாகரிகம் தெரியவில்லை. நீயெல்லாம் என் பெயரை சொல்லியா நான் வாழ போறேன். ஹன்சிகாவை பத்தியே கவலை படாதவன் நான் தன்ஷிகாவை பத்தியா கவலை பட போறேன் என சரமாரியாக விளாசினார்.

அப்படி, டி.ஆர்., பேசிக் கொண்டிருக்கும் போதே, நடுவில் குறிக்கிட்டு தன்ஷிகா மன்னிப்பு கேட்டு காலில் விழுந்து சாரி சொன்னார். ஆனால், அதற்கும் அசராத டி.ஆர்., நீ கட்டி வரல சாரி. இப்போ சொல்ற சாரி என வெளுத்து வாங்கியது, நடிகை தன்ஷிகா கண்ணீர் விட்டு மேடையிலேயே அழுது விட்டார்.

வீடியோ: நன்றி Behindwoods TV

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress sai dhanshika cries in stage after t rajendars scold

Exit mobile version