Advertisment

’எனது சிகிச்சைக்காக ரூ. 25 கோடி வாங்கினேனா? சமந்தா விளக்கம்

நடிகை சமந்த சிகிச்சைக்காக பிரபல நடிகர் ஒருவரிடம் இருந்து ரூ. 25 கோடி வாங்கியதாக தகவல் வெளியான நிலையில் , இதற்கு சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
சமந்தா விளக்கம்

சமந்தா விளக்கம்

நடிகை சமந்த சிகிச்சைக்காக பிரபல நடிகர் ஒருவரிடம் இருந்து ரூ. 25 கோடி வாங்கியதாக தகவல் வெளியான நிலையில் , இதற்கு சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisment

நடிகர் சமந்த, விஜய் தேவரகொண்டாவுன் நடித்த ‘குஷி’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இதன் பாடல் வெளியாகி தமிழ், மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது. இந்நிலையில் நடிகை சமந்த மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் என்றும் அவருக்கு சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டதாக தகவல் வெளியானது.  மேலும் சிகிச்சைக்காக ரூ. 25 கோடி தேவைப்பட்டாதால் அதை பிரபல நடிகர் ஒருவரிடம் கேட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்த சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் தனது விளக்கத்தை பகிர்ந்துள்ளார்  “ மயோசிடிஸ்  சிகிச்சைக்காக ரூ. 25 கோடி வாங்கினேனா? யாரோ தவறான தகவலை உங்களுக்கு தெரிவித்துள்ளனர். நான் என் சிகிச்சைக்காக குறைந்த தொகையை எனது வருமானத்தில் இருந்து செலவிடுகிறேன். நான் செய்யும் வேலையிலிருந்து கிடைக்கும் பணம் மூலம் என்னால் என்னை கவனித்துக்கொள்ள முடியுகிறது. மயோசிடிஸ் நோயால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை தொடர்பான தகவல்களை  பொறுப்புடன் வெளியிடுங்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment