/tamil-ie/media/media_files/uploads/2021/01/vannitha.jpg)
Vanitha Vjiayakumar : கடந்த 1995-ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை வனிதா. அதன்பிறகு மாணிக்கம், காக்கை சிறகினிலே (இணை இயக்குநர்) உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர், கடந்த 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பரை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு நடிப்பில் இருந்து விலகிய அவர், கடந்த 2007-ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்தார்.
அதன் பின்னர் 2007-ம் ஆண்டு ஆனந்த் ஜெயராமன் என்பவரை 2-வது திருமணம் செய்த அவர் 2012-ம் ஆண்டு விவகாரத்து செய்தார். 2 திருமணம் செய்தாலும் அவரது திருமண வாழ்கை சரிவர அமையாத நிலையில், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. சமீபத்தில் இது தொடர்பாக வீடியோ பதிவை வெளியிட்ட வனிதா பீட்டர் பவுல் பிரிந்துவிட்டதாக கூறியிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ-என்ட்ரியை வனிதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார். தற்போது யூடூயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது வனிதா மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா நடித்த பாம்பு சட்டை படத்தை இயக்கியவருமாக ஆடம் தாசன் தாக் இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட இந்த படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தபடம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படத்திற்காக வனிதா உடல் எடையை குறைத்து இருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.