நடிகை வரலட்சுமி சரத்குமார் பாஜகவில் இணைந்துவிட்டாரா?

பாஜக-வில் தான் இணைந்துவிட்டதாக வெளியான தகவலுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கமளித்துள்ளார்.

பாஜக ஆட்சியின் 4 ஆண்டு கால சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பிரபலங்களை சந்தித்து சாதனை விளக்க அறிக்கையை பாஜக தலைவர்கள் அளித்து வருகின்றனர். இதன் ஒரு பாகமாக நடிகை வரலட்சுமி சரத்குமாரை சந்தித்த பாஜக-வின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் சாதனை அறிக்கையை வழங்கினார்.

இந்த சந்திப்பின் புகைப்படம் வெளியானதும் நடிகை வரலட்சுமி பாஜக-வில் இணைந்து விட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில் அதற்கு விளக்கமளிக்கும் விதமாக தனது ட்விட்டரில் வரலட்சுமி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், பாஜக தலைவர் முரளிதரராவ் என்னை சந்தித்துப் பேசினார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் இதர விஷயங்களில் பாஜக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பேசினோம். இந்த சந்திப்பு மிக இனியான சந்திப்பாக அமைந்தது. பிரதமர் நரேந்திர மோடி எங்களுடைய கருத்துகளையும் அறிந்துகொள்ள விரும்புகிறார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதற்குள் இந்த சந்திப்பு குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பியவர்களுக்கு சொல்கிறேன், “நான் பாஜக மட்டுமல்ல; எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close