scorecardresearch

ரஜினி அரசியலுக்கு வர நடிகைகள் ஆதரவு

ரஜினி ரசிகர்கள் சந்திப்பை முடித்துவிட்டார். கடைசி நாளான 19ம் தேதி ரசிகர்க்கள் மத்தியில் பேசிய ரஜினி, அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாக தெரிவித்தார். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து எதிர்ப்பும் ஆதரவும் உருவாகியுள்ளது. திரைத்துறையில் உள்ள சிலர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். நடிகை கஸ்தூரி மட்டும் ரஜினியின் பேச்சை கிண்டல் செய்து ட்விட் செய்துள்ளார். அதிமுகவில் இணைந்த கவர்ச்சி நடிகை நமீதா, ஜெயலலிதா இருந்த போதே பெரிய அளவில் கட்சி […]

ரஜினி அரசியலுக்கு வர நடிகைகள் ஆதரவு
ரஜினி ரசிகர்கள் சந்திப்பை முடித்துவிட்டார். கடைசி நாளான 19ம் தேதி ரசிகர்க்கள் மத்தியில் பேசிய ரஜினி, அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாக தெரிவித்தார்.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து எதிர்ப்பும் ஆதரவும் உருவாகியுள்ளது. திரைத்துறையில் உள்ள சிலர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். நடிகை கஸ்தூரி மட்டும் ரஜினியின் பேச்சை கிண்டல் செய்து ட்விட் செய்துள்ளார்.

அதிமுகவில் இணைந்த கவர்ச்சி நடிகை நமீதா, ஜெயலலிதா இருந்த போதே பெரிய அளவில் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. ஜெயலலிதா இறந்த பின்னர் இரண்டு அணியினரும் அவரை சீண்டவில்லை. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று நமீதா போன் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

அதே போல ரஜினியுடன் அதிக படங்களில் இணைந்து நடித்த நடிகை மீனா, ஸ்ரீப்ரியா போன்ற நடிகைகளும் ரஜினியிடம் போனில் பேசியுள்ளனர். அரசியலுக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கும் என்று அவர்கள் சொல்லியுள்ளனர். அவர்கள் சொன்ன கருத்துக்களைக் கேட்ட ரஜினி பதில் ஏதும் சொல்லவில்லை என்றும் சொல்கிறார்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actresses support rajinis politics

Best of Express